கொலை.. போதை.. வழிப்பறி - கோவை கல்லூரி மாணவி பலாத்கார சம்பவ நடந்த இடத்தில் எகிறும் க்ரைம் ரேட்
கோவை: கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் இருந்தாலும் அந்தப் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மாணவி பாலியல் சம்பவம் நடைபெற்ற அதே இடத்தில் ஏற்கனவே கொள்ளை, கொலை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தன் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவியை பார்த்த அந்த கும்பல், ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பிவிட்டனர்.

மாணவி பாலியல் வழக்கு
இதுதொடர்பாக மாணவியின் ஆண் நண்பன் வினீத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மாணவி இன்று அதிகாலை 4 மணியளவில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 7 தனிப்படைகள் அமைத்து அந்த 3 நபர்களை தேடி வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் ஏற்கனவே பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன.
கோவையின் முக்கிய பகுதிக்கு மிக அருகில் இருந்தாலும் அது சாதாரண மண் பாதை. அந்த வழியாகத்தான் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, நீலிக்கோணம்பாளையம், இருகூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள். மேலும் மேற்சொன்ன பகுதிகளில் இருந்து, விமானம் நிலையம், அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்களும் அந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
போதை ஆசாமிகள்
காலியான இடம் என்பதால் அங்கு போதை ஆசாமிகள் மது குடிப்பதற்காக பயன்படுத்துவார்கள். அருகிலேயே ஏராளமான கல்லூரிகள் இருப்பதால் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கும் அந்தப் பகுதியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக பகல் நேரங்களில் மட்டுமே அந்த சாலையில் அதிகமானோர் செல்கின்றனர். இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு ஒருகொலை, கொள்ளை வழக்கு நடந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை ஒரு போதை கும்பல் மதுகுடிக்க பணம் கேட்டு கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதேபோல தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அந்தப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதே பகுதியில் ஒரு சட்ட விரோத பாரும் இயங்கி வந்தது.
அச்சத்தில் மக்கள்
மாணவி பாலியல் வழக்குக்கு பிறகு அந்த பாரை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பூங்கா நகர், எஸ்.ஐ.ஹெச்.ஐ காலனி சாலை, பிருந்தாவன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications