கோவையில் குண்டும் குழியுமான சாலைகள்.. மாநகராட்சிக்கு பறந்த அபராதம்.. நீதிமன்றம் சொன்னதுதான் ஹைலைட்
கோவை: கோவை மாநகராட்சியில் சாலையை சீரமைக்க தாமதம் ஏற்பட்டதால் கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமானியர் ஒருவர்.. இந்த வழக்கில் மாநகராட்சிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வரும் காலத்தில் சென்னைக்கு நிகராக வளரும் அளவிற்கு தொழில் நிறுவனங்கள் கோவையின் எல்லா பகுதியிலும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கோவையில் திரும்பிய பக்கம் எல்லாம் தொழிற்சாலைகள் தான் நகரங்களுக்குள் இருக்கும்.. படிப்படியாக பல பகுதிகள் குடியிருப்பு பகுதிகளான மாறின. பெரிய தொழில் நிறுவனங்கள் மெல்ல மெல்ல புறநகரை நோக்கி இடம் பெயர தொடங்கின.. இப்போது கோவை நகருக்குள் குடியிருப்புகளோ அதிகமாக உள்ளன. நீலாம்பூர், கருமத்தப்பட்டி, சரவணம்பட்டி, மதுக்கரை, காரமடை என நிறுனங்கள் எல்லாம் கோவையில் புறநகர் பகுதிகளில் திரும்பிய பக்கம் எல்லாம் நிறுவனங்களே உள்ளன.

கோவை மாநகர் வளர்ந்துவிட்ட நிலையில், நீண்ட காலமாக விரிவாக்கம் செய்யப்படவில்லை.. எனினும் தற்போதைய நிலையிலேயே கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 5 லட்சம் வீடுகள் கோவை நகருக்குள்ளேயே இருக்கிறது. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். கோவை மாநகரத்தை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரம் வீதிகள் உள்ளன.
இங்கு ஏராளமான சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கிறது. இதேபோல் கோவையில் கியாஸ் குழாய் பதிக்கும் பணிகளும், 24 மணி நேர குடிநீர் திட்டம், தொலை தொடர்பு சேவைக்காக கேபிள் பதிக்கும் திட்டமும் நடந்து வருகிறது. இப்படி பல்வேறு பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், கோவையின் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கோவை மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி வசிக்கும் விஸ்வஜித் என்பவர் கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் 61-வது வார்டில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து புதிய சாலை அமைத்து தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடந்த போது, கோவை மாநகராட்சி கடந்த 23-ந் தேதிக்குள்ளாக பணிகளை முடிப்பதாக உத்தரவாதம் அளித்தது. பின்னர் சூயஸ் குடிநீர் நிறுவனம் தனது திட்டத்திற்கான குழாய்களை பதிக்க சாலைகளை தோண்டி இருப்பதாக கூறியது. மேலும் அதை சீரமைத்து சாலை போட மேலும் அவகாசம் கோரியது. அதன் பேரில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியது.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அப்போதும் அதே காரணத்தை கூறி சாலை பணிகளை முடிக்க கோவை மாநகராட்சி தரப்பில் மேலும் கால அவகாசம் கோரியது. அதை ஏற்க மறுத்த நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், மாநகராட்சி நிர்வாகம் ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டார். அதை 2 வாரத்துக்குள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதியில் செலுத்தும்படியும், அந்த தொகையை காலதாமதத்திற்கு காரணமான சாலை ஒப்பந்ததாரர் அல்லது சூயஸ் குடிநீர் நிறுவனத்திடமோ அல்லது இவர்கள் இருவரிடம் இருந்தோ மாநகராட்சி நிர்வாகம் திரும்ப வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். சாலை பணிகளை தாமதமாக மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்பதற்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக உள்ளது.
இதனிடையே கோவையில் சாலைகள் சீரமைப்பு பணிகள் விரைவில் நடைபெற போகிறது. கோவை மாநகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். கோவை மாநகரில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டம் (டூரிப்) திட்டத்தின் கீழ் ரூ.50¾ கோடி, நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் (என்.எஸ்.எம்.டி.) திட்டத்தின் கீழ் ரூ.28¾ கோடி, மாநில மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26½ கோடி உள்பட 203 கி.மீ. தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க மொத்தம் ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த நிதியில் இருந்து சாலைகளை சீரமைக்கும் பணக்காக தற்போது டெண்டர் விடப்படும் பணிகள் நடந்து வருகிறதாம். ஓரிரு மாதங்களில் கோவையில் குண்டும் குழியுமாக உள்ள பல சாலைகள் சீரமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
-
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
கோவை அன்னூரில் சாலை விரிவாக்கத்துக்காக 786 ஏக்கர் நிலம்.. காலாவதியான முடிவு.. விவசாயிகள் மகிழ்சசி -
கோவையின் இதயப் பகுதியில் ஏற்பட போகும் மாற்றம்.. செந்தில் பாலாஜி ஷார்ப் திட்டம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள்












Click it and Unblock the Notifications