கோவை மாநகராட்சியில் என்னதான் நடக்கிறது?.. 24 மணி நேரத்தில் இத்தனை மாற்றங்களா?.. அதுவும் முதல்முறை!
கோவை: கோவையில் குனியமுத்தூரில் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாக ஐடியில் இருந்து பதில் கிடைத்துள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மாவட்ட நிர்வாகத்தினர் கூறுவதாகும். ஆனால் பல இடங்களில் குப்பை கூளங்கள் சேகரிக்கப்படாமல் இருப்பதாக புகைப்படத்துடன் புகார்களும் செல்கின்றன.
உயர் பதவி அதிகாரியிடம் இந்த புகார் செல்லும் போது இதற்காக நடவடிக்கையானது எடுக்கப்படுகிறது. அதன் பிறகு பழைய மாதிரி குப்பைகள் தேங்கிதான் கிடக்கும்.

மாநகராட்சி, நகராட்சி
இதுகுறித்து அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு டிவிட்டர் ஐடி மூலம் புகார் அளித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு ஒரு புகார் டிவிட்டர் மூலம் சென்றது.

குப்பைத் தொட்டி
அதில் வார்டு எண் 87, பாரதி நகரில் குனியமுத்தூரில் குடியிருப்பு பகுதியில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. அந்த குப்பைத் தொட்டியில் குப்பைகள் கண்டபடி இரைந்து காணப்படுகின்றன. மேலும் அந்த குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி நிறைய செடி கொடிகள் புதர் போல் மண்டிக் கிடந்தன.

நன்றி
இதை புகைப்படமாக எடுத்த ஒருவர் கோவை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்தார். இதையடுத்து அந்த இடம் சூப்பராக சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதை புகைப்படமாக எடுத்த அதிகாரிகள் ட்வீட் அனுப்பிய நபருக்கு,எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.

குவியும் பாராட்டு
இதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் ஏதோ விளம்பரத்திற்காக சுத்தப்படுத்துவது போல் ஆகிவிடக் கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அனுப்பிய புகாருக்கு அரசு ஐடியிலிருந்து முதல்முறையாக பதில் வந்துள்ளதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications