கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் சோகம்: தனிக்குடித்தனத்திற்கு மனைவி அடம்.. கோபத்தில் தீக்குளித்த பாதிரியார்.. குடும்பமே காலி

Google Oneindia Tamil News

கோவை: மனைவி தனிக்குடித்தனம் செல்ல விரும்பி தொல்லை செய்ததால், விரக்தியடைந்த கணவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியில் பாதிரியாராக இருந்தவர் ரிச்சர்ட் பிராங்க்ளின். இவரது மனைவி பெயர் ஜெர்சி. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர்.

கர்ப்பமடைந்த ஜெர்சி, தாய் வீட்டிற்கு பிரசவத்திற்க்கு சென்று தங்கியுள்ளார்.

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

குழந்தை பிறந்த பிறகு ஜெர்சியை உடன் வருமாறு அழைத்துள்ளார் ரிச்சர்ட். ஆனால், உங்க அம்மா, அப்பாகூட வாழ முடியாது. தனிக் குடித்தனம் போக வேண்டும் என்று கேட்டுள்ளார், ஜெர்சி. இதற்கு ரிச்சர்ட் மறுத்து, ஒன்றாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

வர முடியாது

வர முடியாது

ஆனால், கோபமடைந்த ஜெர்சி, குழந்தையை வைத்து பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்தார். அதாவது குழந்தையை நான் எடுத்துக்கொண்டு உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என கூறி மறுத்துள்ளார். இதனால், ரிச்சர்ட் மனமுடைந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மனைவிக்கு தீக்காயம்

மனைவிக்கு தீக்காயம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ குளித்தார். அவரின் அலறல் கேட்டு காப்பாற்ற வந்த ஜெர்சியும் பலத்த தீ காயமடைந்தார். இருவரையும் மீட்ட அப்பகுதியினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி முதலில் ஜெர்சி உயிரிழந்தார்.

இப்படி ஆகிபோச்சே

இப்படி ஆகிபோச்சே

ரிச்சர்ட்டுக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. தனிக்குடித்தன விவகாரத்தால், இப்போது அந்த குழந்தை, பெற்றோர் இல்லாமல் அநாதையாகியுள்ளது.

English summary
A wife who tried to save the husband from self immolation died after she got injuried.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X