சல்லுனு கோவையில் வந்த திமுக கொடி கட்டப்பட்ட சொகுசு கார்! உள்ளே எட்டிப்பார்த்த போலீஸ்.. என்னங்க இது?
கோவை: கோயம்புத்தூரில் காந்திபுரம், அடையார் ஆனந்த பவன் பின்புறமுள்ள NGN சாலையில் இரவு நேரத்தில் ஒரு சொகுசு கார் வந்துள்ளது.. அந்த காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது.. இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீசார், அந்த காரை மறித்து, காரில் இருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை ஈசிஆர் ரோட்டில், கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி அதிகாலையில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவூட்ட வேண்டி உள்ளது..

அந்நாளில் விடிகாலை நேரத்தில், பெண் டாக்டர் ஒருவர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு காரில் சென்றிருந்தார். அங்கே ஏற்கனவே நின்றிருந்த 2 கார்களில் இருந்த இளைஞர்கள், அந்த பெண்களை அச்சுறுத்துவது போல வந்துள்ளனர்..
ஈசிஆர் ரோடு சம்பவம்
இதைப்பார்த்து பயந்துபோன பெண்கள் தங்கள் காரில் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.. ஆனாலும், அந்த இளைஞர்கள் தங்களது 2 கார்களில், அப்பெண்களை விரட்டி கொண்டே அவர்களின் வீடு வரை சென்றிருக்கிறார்கள்..
அந்த 2 கார்களிலுமே திமுக கொடியை கட்டியிருந்தனர். இதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகவும், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. பெண்களை விடிகாலை நேரத்தில் 2 கார்களில் விரட்டி வந்த திமுக பிரமுகர்கள் யார்? என்று இணையவாசிகள் கொந்தளித்தனர்..
டோல்கேட் கட்டணம்
உடனடியாக 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசாரும் காரின் பதிவு எண்களை வைத்து விசாரணையில இறங்கினர்.. அப்போதுதான், கார்களில் வந்த 7 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. பெண்களை துரத்திய அத்தனை பேருமே கைது செய்யப்பட்டனர்.. அவர்களது 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால், காரில் வந்த இளைஞர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் உறுதியானது... அதாவது டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவே இப்படி திமுக கொடியை காரில் கட்டி வந்ததாகவும், தங்களுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வாக்குமூலம் தந்திருந்தனர். இதற்கு பிறகுதான் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.
கோவையில் காரில் திமுக கொடி
இந்நிலையில், காரில் திமுக கொடியை கட்டி, மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது.. அதாவது கோவையில் தற்போது போதைப்பொருள் பழக்கமும், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக போலீசார், இரவு நேரங்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்றும் இரவு நேரம் ரோந்து பணியில் இருந்தனர்.. அப்போது காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த நபர்கள் மது போதையில் இருந்ததை கவனித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரில் சோதனை - வீடியோ
பிறகு அந்த காரை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்ல போகிறோம் என்று கூறிய போலீசார், அந்நபர்களை ஆட்டோவில் போகுமாறு அனுப்பி வைத்துள்ளனர்..
பின்னர் அந்நபர்களின் கார் சோதனையிடப்பட்டபோது, ஏகப்பட்ட மது பாட்டில்கள் அதில் இருந்துள்ளன.. இருந்தாலும், "காரில் பணம் வைத்திருந்தோம், அதை இப்போது காணவில்லை" என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே, காரைச் சோதனையிடுவதை செல்போனில் வீடியோ எடுக்குமாறு, சப்-இன்ஸ்பெக்டர் சொல்லி உள்ளார். .
போதையில் வந்தவர்களை நேற்றிரவே அனுப்பி வைத்துவிட்டோம்.. அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசாரும் தெரிவித்துள்ளனர்
இந்த நிகழ்வையெல்லாம், அந்த பகுதியில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து இணையத்திலும் வெளியிட்டு விட்டார்கள்.. அதுதான் தற்போது வெளியாகி பலரையும் விக்கித்து போக செய்துள்ளது..
கிளம்பிய கேள்விகள்
இந்த வீடியோவானது, இணையத்தில் விவாதத்தை கிளப்பிவிட்டுள்ளது.. "சாதாரண மக்கள் குடித்துவிட்டு வண்டிஓட்டினால் உடனே கேஸ் போட்டு உள்ளே தள்ளுகிறார்கள்.. ஆனால், திமுக கட்சி கொடி கட்டி வந்தால் நடவடிக்கை எடுப்பதில்லையா? திமுக கட்சி கொடி இருந்ததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லையா? சட்டம் திமுக பிரமுகர்களுக்கு இல்லையா?" என்று கேட்டு வருகிறார்கள்..
மேலும் சிலர், "உண்மையிலேயே காரில் வந்தவர்கள் திமுகவினரா? அல்லது வேண்டுமென்றே திமுக கொடியை காரில் கட்டி வந்தார்களா? என்பது உறுதியாக தெரியாது.. எனவே போலீசார் இதில் தலையிட்டு உண்மையை விசாரிக்க வேண்டும்" என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications