முயல் ரத்தத்தில் ஹேர் ஆயில் தயாரிக்கலாமா? கோவையில் திடீர் ரெய்டால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: முயல் ரத்தத்தில் தலைமுடியை வளர வைப்பதற்கான எண்ணெய் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் தவறு. ஒரு வேளை யாராவது விற்பனை செய்வதாக புகார் எழுந்தால் அந்த நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைக்காலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முடி உதிர்தல் பிரச்சினை என்பது அதிகரித்து வருகிறது. தண்ணீர் மாற்றம், ஷாம்பு பயன்பாடு, தலைக்கு தேங்காய் எண்ணெய்யே வைக்காமல் விடுவது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் முடி கொட்டுதல் நடக்கிறது.

health coimbatore

அது போல் 20 வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை விழுந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் எழுகிறது. அது போல் பெண்களும் இன்று எக்டென்ஷன் என சொல்லப்படக் கூடிய எக்ஸ்ட்ரா முடியை வாங்கி தங்கள் தலையில் வெல்க்ரோ டைப்பில் ஒட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிப் டைப்பிலும் வருகிறது. பள்ளி, கல்லூரி படிக்கும் போதே முடி உதிர்கிறது என்றால் திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு என்னாகுமோ என்ற கவலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் ஏதேதோ எண்ணெய்யை காய்ச்சி பயன்படுத்தினார்கள். சீரம், கரோட்டின் ஆயில் என எதை செய்தாலும் ரிசல்ட் இல்லை. இந்த நிலையில்தான் முயல் ரத்தம் கலந்த எண்ணெய் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 100 எம்எல் ரூ 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதில் சில போலிகள் உலா வருகின்றன. இந்த எண்ணெய்யை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவினால் முடி வளர்வதாக சொல்லப்படுகிறது. ஒரு உயிரை துன்பப்படுத்தி அதன் மூலம் எண்ணெய் தயாரிப்பது என்பதை ஏற்க முடியாது என சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறார்கள்.

அது போல் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முயல் ஹேர் ஆயில் ஈரோட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அது போல் கோவை மாவட்டத்திலும் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் அதிகாரிகள் முயல் எண்ணெய் விற்பனை, தயாரிப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

பொள்ளாச்சியில் 3 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் கூறுகையில், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு விதிமுறைகளில் விலங்கு ரத்தம் பயன்பாடு அனுமதிக்கப்படவில்லை. முயல் ரத்தம் பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்க அனுமதி கிடையாது.

இதுகுறித்து கோவை மாவட்டத்தில் உள்ள அழகுசாதன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இது போல் எண்ணெய் தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+