கோயம்புத்தூர்-க்கு வந்த அமெரிக்க டெக் நிறுவனம்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் 'தொழில்துறை தலைநகரம்' என அழைக்கப்படும் கோயம்புத்தூர், தற்போது வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் மிக முக்கிய முதலீட்டு மையமாக உருவெடுத்து வருகிறது. சென்னையைத் தாண்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கு (MNCs) கோவை மாநகரம் தற்போது மிகவும் விருப்பமான இடமாக மாறியுள்ளது.

இதற்குச் சான்றாக, கோவையில் தற்போது 41 புதிய ஐடி பூங்காக்களும், சுமார் 18 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட வணிக இடங்களும் (Commercial Space) அதிவேகமாக உருவாகி வருகின்றன. இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு வகிக்க திட்டமிட்டு புதிய அலுவலக கிளையைத் தொடங்க அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனம் கோவையில் கால்பதித்துள்ளது.

Coimbatore IT coimbatore it hub exzeo coimbatore office us companies in coimbatore coimbatore it growth 2026 tamil nadu it investment coimbatore tech jobs exzeo india expansion coimbatore emerging it city coimbatore it parks coimbatore software companies

கோவையில் அலுவலகம் திறந்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான எக்ஸீயோ (Exzeo Group, Inc.), கோயம்புத்தூரில் உள்ள ஃபிளிக்சோ ஸ்பேசஸ் (Fliqzo Spaces) வளாகத்தில் தனது புதிய அதிநவீன அலுவலகத்தைத் திறந்துள்ளதாக அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைத் தொடர்ந்து, இந்தியாவில் இந்நிறுவனம் அமைக்கும் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE: XZO) பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம், சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுத் துறைக்கான (P&C Insurance Ecosystem) 'இன்சூரன்ஸ்-அஸ்-ஏ-சர்வீஸ்' (IaaS) என்ற பிரத்யேக மென்பொருள் தொழில்நுட்பத் தளத்தை உலகளவில் வழங்கி வருகிறது.

எக்ஸீயோ நிறுவனம்

கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டு காப்பீட்டு நிறுவனமான 'எச்சிஐ குரூப்' (HCI Group, Inc.) இன் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புப் பிரிவாக இந்த நிறுவனம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 'டைப்டேப் இன்சூரன்ஸ் குரூப்' (TypTap Insurance Group, Inc.) என்ற பெயரில் இயங்கி வந்த இந்நிறுவனம், பின்னர் முறையாக 'எக்ஸீயோ குரூப்' என மறுபெயரிடப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையில் பொதுப் பங்குகளை வெளியிட்டு (IPO) பொது நிறுவனமாக மாறியது.

Coimbatore IT coimbatore it hub exzeo coimbatore office us companies in coimbatore coimbatore it growth 2026 tamil nadu it investment coimbatore tech jobs exzeo india expansion coimbatore emerging it city coimbatore it parks coimbatore software companies

புளோரிடாவின் தம்பா நகரை கார்ப்பரேட் தலைமையகமாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், பரேஷ் படேல் தலைமையில் இயங்கி வருகிறது. இவர் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ (Chairman and CEO) ஆக இருந்து வருகிறார்.

உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும், கடந்த 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1 2026) மட்டும் இந்நிறுவனம் 56 மில்லியன் டாலர் ஒட்டுமொத்த வருவாயை ஈட்டியுள்ளது.

கோயம்புத்தூரில் தற்போது ஒரே நேரத்தில் 41 புதிய ஐடி பூங்காக்கள் மற்றும் 18 மில்லியன் சதுர அடி வணிக இடங்கள் கட்டுமானத்தில் உள்ள சூழலில், எக்ஸீயோ போன்ற உலகத்தரம் வாய்ந்த கடன் இல்லாத அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாகக் கோவையில் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்குவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய பலத்தை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+