கோவையில் உள்ள தொழில்முனைவோருக்கு குட் நியூஸ்.. திட்டத்தை அறிவித்த கலெக்டர்
கோவை: பசுமைத் தொழில் முனைவோர்களை பொருளாதார வகையில் ஊக்கப்படுத்தும் வகையில் பசுமை தொழில்முனைவோர் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து தொழிலை வளர்ச்சியடையச் செய்வதற்கான நிதியைப் பெறலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கோவை மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து பசுமை மாவட்டமாக ஆக்கும் வகையில், பசுமை தொழில் முனைவோர் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பசுமை செயல்பாடுகளை உருவாக்கி தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு பொருளாதாரா வகையில் உதவி செய்யும் பொருட்டு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். மிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், பொருளாதார ரீதியாக பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் பொருட்டு "பசுமை தொழில் முனைவோர் திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பசுமை தொழில் முனைவோர் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்து சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை தொழில் நிறுவனங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஓராண்டிற்கு மேல் தொடந்து செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் GST பதிவு பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனம் குறைந்த பட்சம் 3 வேலையாட்களை கொண்ட நிறுவனமாகவும் ஜெம் - GEM இணையதளத்தின் மூலம் பதிவுதொழ செய்திருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் ரூ. 4 லட்சம் இருத்தல் வேண்டும். உதயம் சான்றிதழ், FSSI, FSSAI, TNPCB, CPE and CPO en O Q வேண்டும். தேர்வு செய்யப்படும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் வீதம் 3 கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ், விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications