பிரபல தொழிலதிபர்.. ஹோட்டல் ரூமில் இளம்பெண்ணுடன்.. திடீர்னு நுழைந்த 3 பேர்.. விக்கித்த கோவை
கோவை தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த கும்பலுக்கு வலை வீசப்பட்டுள்ளது
கோவை: ஹோட்டலில் இளம்பெண்ணுடன் ரூம் போட்டு தொழிலதிபர் தங்கி இருந்தார்.. அப்போது திடீரென்று 3 பேர் ரூமில் நுழைந்து விட்டனர்.
தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது சமூகம்.. சமீபகாலமாகவே, ஆண்களை மிரட்டி, ஆபாசமாக பயன்படுத்தி, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் பெண்கள் அதிகமாகி விட்டனர்..
நேற்றுகூட பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்தது.. உதய்நகரை சேர்ந்த அந்த இளைஞருக்கு ஒரு பெண் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ளார்.. இருவரும் நெருங்கி பேசி வந்துள்ளனர்.

நிர்வாண வீடியோ
திடீரென ஒருநாள், அந்த இளைஞரை நிர்வாணமாக வீடியோ காலில் பேசும்படி கேட்டாராம் அந்த பெண்.. அந்த இளைஞரும் உணர்ச்சிவசப்பட்டு அந்த பெண் சொன்னபடியே நிர்வாண நிலையில் நின்று வீடியோ காலில் பேசி இருக்கிறார்.. அதற்கு பிறகுதான் வேலையை காட்டி உள்ளார் அந்த பெண்.. அடிக்கடி பணம் தேவை, தராவிட்டால், நிர்வாணமாக நின்று பேசிய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.. எவ்வளவோ பணம் கொடுத்தும், அந்த பெண்ணின் டார்ச்சர் நிற்காமல், கடைசியில் போலீசுக்கு ஓடியுள்ளார்.

ரூம் போட்ட நபர்
பிறகுதான், அந்த பெண்ணுக்கு பின்னால் ஒரு கும்பலே இருப்பது தெரியவந்தது.. போலீசார் இதுதொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.. அந்தவகையில் நம் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. 2 நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல தொழிலதிபர், ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டுள்ளார். கோவை அரசு கல்லூரி ரோட்டை சேர்ந்தவர் அந்த தொழிலதிபர்.. 63 வயதாகிறது.. அவருடன் ஒரு பெண்ணும் தங்கியிருந்ததாக தெரிகிறது.. அப்போது திடுதிப்பென்று 3 பேர் கொண்ட கும்பல் திடீரென ரூமுக்குள் கத்தியுடன் புகுந்துவிட்டது.

காந்திபுரம்
"நீ எப்படி இந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளலாம்?" என்று கேட்டு தொழிலதிபரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு கத்திமுனையில் அவரை மிரட்டி, தொழிலதிபரையும், அந்த பெண்ணையும் நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.. அவரிடம் இருந்த ரூ.1000 மற்றும் ஏடிஎம் கார்டையும் பறித்து கொண்டனர்.. தொழிலதிபரிடம், "உன்னுடைய நிர்வாண வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சோஷியல் மீடியாவில் வெளியிடுவோம்" என்று மிரட்டி விட்டு போயினர்.

ஸ்டார் ஹோட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டூர் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.. அந்த தொழிலதிபர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக ரூம் போட்டாராம்.. அதற்காகவே அந்த பெண்ணையும் வரவழைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், காந்திபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் தொழிலதிபர் தங்கியிருப்பது, வெளியாட்களுக்கு எப்படி தெரியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

லைசென்ஸ்
ஒருவேளை, தொழிலதிபருக்கு தெரிந்தவர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் அல்லது, தொழிலதிபருடன் இருந்த பெண்ணுக்கும் வீடியோ எடுத்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் 2 தரப்பிலும் சந்தேகங்கள் வலுத்துள்ளதால், போலீசார் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த பெண் உண்மையிலேயே ஆயுர்வேத சிகிச்சை தருபவரா? அதற்கான லைசென்ஸ் உள்ளதா? அல்லது பொய்யான தகவலை சொல்லி தொழிலதிபரிடம் நெருங்கினாரா? என்ற விசாரணையும் விரிவடைந்து உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications