'அப்பா பஸ் வருது' மகன் சொல்லி முடிப்பதற்குள் இருவர் மீதும் ஏறி இறங்கிய பேருந்து.. கோவையில் ஷாக்
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம் சூலூரில் கிட்டாம்பாளையம் பகுதியில் தந்தை மகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாத்தாங்காடு தங்கவேலு, இவர் இன்று காலை தன் மகன் நந்தகுமாரை கொடுமுடியில் உள்ள கோயிலுக்கு அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கருமத்தம்பட்டியை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது கிட்டாம்பாளையம் நான்கு ரோடு அருகே வரும் போது, பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து, தங்கவேலு மற்றும் நந்தகுமார் மீது அதிவேகமாக மோதியது.

சாலையை கடந்துவிடலாம் என்று தங்கவேலு முயன்ற போது, தனியார் பேருந்து வேகமாக வந்திருக்கிறது. அப்போது தனியார் பேருந்த ஓட்டுநர் வாகனத்தை நேராக வராமல், இருசக்கர வாகனம் கடப்பதற்குள் சாலையை கடந்துவிடலாம் என்று இடதுபுறமாக வேகமாக திருப்பி உள்ளார். ஆனால் தங்கவேலுவும் அதே பகுதியிலேயே வாகனத்தை இயக்கி இருக்கிறார்.

இதனால் கண் இமைக்கும் நேரத்தில் பேருந்தின் முன்புற சக்கரத்தில் சிக்கி தங்கவேலு, மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தப்பட்டி காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications