கோவையில் ரூ. 16 கோடியில் வரப்போகும் சூப்பர் திட்டம்.. உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியோடு மாறப்போகுது
கோவை: கோவை மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் பொதுமக்கள் பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தும் மேம்பாலமாக உள்ளது. இந்த மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் இவ்வழியாக சென்றால் சில மணி நேரங்கள் காத்திருந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், உப்பிலிபாளையம் மேம்பாலம் ரூ. 16 கோடி மதிப்பில் விரிவாகக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. ஐடி நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வசித்து வருகின்றனர். அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல, ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என முன்னணி நிறுவனங்களும் கோவை மாவட்டத்திலேயே முதலீடுகளைச் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சி சார்பில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் பிரதானப் பிரச்சனையாக இருப்பது அதன் போக்குவரத்து நெரிசல் தானம். இதனால், மாவட்டத்தில் தேவையான பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற.
அந்த வகையில், ஐம்பது ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட பழைய மேம்பாலம் என்று அழைக்கப்படும் கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தை ரூ. 16 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவாக துவங்கவுள்ளது.
கோவை மாவட்டத்தில், உப்பிலிபாளையம் மேம்பாலம் முக்கியப் சந்திப்பாகும். இந்த மேம்பாலம் 50 ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், தற்போது மக்கள் தொகை பெருக்கம், வாகன ஓட்டிகள் அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பீக் ஹவர்ஸ்களில் இந்த மேம்பாலத்தில் செல்லும்போது பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, மழை காலங்களில் இந்தமேம்பாலத்தின் கீழ் குளம் போல் நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இப்பகுதியில் பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை காரணமாக மேம்பாலத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இந்த மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். விரிவாக்கம் செய்வதற்கான நிதியைப் பெறுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி உத்தரவு பெறப்படவுள்ளது. இங்கே தொழில்நுட்ப ஒப்புதல் பெற கடந்த சில மாதங்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தமேம்பாலத்தின் மையப் பகுதியில் 16 மீட்டர் அகலத்திற்கு ரவுண்டானா பெரிதாக்கப்படவுள்ளது. மேம்பாலத்தின் வெளிப்புறப் பகுதியில் போதிய இடவசதி இல்லை. வணிக கட்டுமானங்கள் பெரியளவில் சாலையின் அருகேயே உள்ளதால் பாலத்தை விரிவாக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளது. நிலமட்டத்திற்கு கீழ் உள்ளவாறு மேம்பாலம் கட்டியதால் இந்த மேம்பாலத்தில் நீர்த்தேக்கம் தவிர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், தற்போது உப்பிலிபாளையம் மேம்பாலப் பணியை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு ரூ. 16 கோடியில் திருத்திய மதிப்பீடு பெறும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications