தங்கம் விலைக்கு "தாலிக்குத் தங்கமே" வேண்டாம்! கோல்டே இல்லாமல் மாங்கல்யம் செய்த கோவை பொற்கொல்லர்
கோவை: தாலிக்குத் தங்கம் இல்லாமலேயே திருமணத்தை நடத்த முடியுமா? நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் தங்கத்திற்கு பதிலாக இப்படி ஒரு புதிய ஏற்பாட்டை கோவையில் உள்ள தங்க நகை கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ 8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ 4360 உயர்ந்துள்ளது. இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

அது போல் வெள்ளியின் விலையும் ஒரு கிராம் 110 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்கும் விலைக்கு தங்கம், வெள்ளி நகைகளை கூட போடாமல் விட்டுவிடக் கூடும். ஆனால் திருமணத்திற்கு திருமாங்கல்யம் என்பது முக்கியமானது. எப்பேர்பட்ட பணக்காரராக இருந்தாலும் அரை பவுனில்தான் தாலி போடுவார்கள்.
இரட்டை தாலி
ஒரு வேளை 60 ஆம் திருமணம் நடந்துவிட்டால் கூடுதலாக அரை கிராம் மேலும் ஒரு திருமாங்கல்யம் என இரட்டை தாலி தொங்கும். ஏழை எளிய மக்கள் கஷ்டத்திற்காக தங்க நகைகளையும் விற்று கழுத்தில் இருக்கும் தாலியை கூட விற்று குடும்பம் நடத்த வேண்டியுள்ளது.
மதிப்பு
தமிழகத்தில் தாலிக்கு பெரிய மதிப்பும் கலாச்சார பந்தமும் இருப்பதால் தங்கம் இல்லாவிட்டாலும் மஞ்சள் கிழங்கில் வைத்து தாலி கட்டிக் கொள்கிறார்கள். தற்போது தங்கம் விற்கும் விலையை பார்த்தால் இனி அப்படித்தான் மஞ்சள் கிழங்கை தாலி கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் நிலை வரும் போல!
கோவை கலைஞர்
இந்த நிலையில் கோவையை சேர்ந்த தங்க நகை கலைஞர் ராஜா என்பவர் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் மஞ்சள் கொம்பில் திருமாங்கல்யத்தை வடிவமைத்துள்ளார். இவர் குனியமுத்தூரை சேர்ந்தவர். காந்திபுரத்தில் நகைக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
மஞ்சள் கொம்பு
மஞ்சள் கொம்பில் தாலி செய்ய வேண்டும் என தோன்றியது ஏன் என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு தனது நண்பர் ஒருவர் திருமணத்திற்கு திருமாங்கல்யம் வாங்க பணத்திற்காக படாதபாடு பட்டாராம். அதை மனதில் வைத்தே மஞ்சள் கொம்பில் திருமாங்கல்யம் செய்தாராம்.
15 ஆயிரம் கூட செலவாகும்
இன்றைய நிலைக்கு ஒரு கிராமுக்கு தாலி செய்ய வேண்டுமானால் கூட 10 முதல் 15 ஆயிரம் வரை ஆகும். அரை பவுன் என்றாலும் கூட 35 ஆயிரம் ஆகிவிட்டது. இதனால் மஞ்சள் கொம்பில் தாலி அணிவதில் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நலமாக வைத்துக் கொள்ளும், மங்களகரமாக இருக்கும்.
செலவு இல்லை உழைப்பு
இதுகுறித்து பொற்கொல்லர் ராஜா கூறுகையில், இந்த மஞ்சள் தாலியை நான் வெளியிட்டதும் எனக்கு நிறைய இடங்களில் இருந்து போன்கள் வருகின்றன. எனக்கு இது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனக்கு இதற்கான செலவு என்று ஒன்றுமில்லை. ஆனால் தாலி வடிவில் செய்வதால் உழைப்பு மட்டுமே உள்ளது.
மஞ்சள் தாலி இலவசம்
இந்த தாலியை செய்வதற்கு 3 முதல் 4 மணி நேரம் ஆகும். தங்கத்தில் தாலி செய்வதை காட்டிலும் மஞ்சள் கொம்பில் தாலி செய்வது கடினம். இந்த மஞ்சள் தாலியை தேவைப்படுவோருக்கு நான் இலவசமாகத்தான் தருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications