கோயம்புத்தூரே முழிக்குதாமே.. எந்த "மலை" தடுத்தாலும்.. அண்ணாமலைக்கு தலைவலி.. அதிரும் திமுக.. "ஆண்டவரே"
கோவை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய செயற்குழு கூட்டம் இன்று நடந்துள்ள நிலையில், கோவையில் இன்னொரு சம்பவம் நடந்து, மொத்த பேரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
அரசியல் கட்சிகள் போஸ்டர்களை ஒட்டுவது இயல்பான விஷயம்தான்.. போஸ்டர் கலாச்சாரத்திற்கு நம்முடைய தமிழகமும் விதிவிலக்கல்ல..

ஆனால், அதிமுகவை சீண்டி திமுகவும், திமுகவை சீண்டி அதிமுகவும் போஸ்டர்களை ஒட்டிக் கொள்வது, எப்போதுமே நடக்கக்கூடிய இயல்பான விஷயமாகும். சமீப காலமாகவே, இந்த லிஸ்ட்லில் பாஜகவும் இடம்பெற்றுவிட்டது.
செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜி விவகாரம் முதல் சனாதனம் வரை போஸ்டர்கள் மூலமாகவே, இந்த கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்தும், கிண்டலடித்தும், சீண்டியும் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டனர்.
இதில் எதிர்பாராதவிதமாக, ஒரே கூட்டணியில் இருப்பவர்களே, எலியும் பூனையுமாக மாறி, போஸ்டர்களை அடித்து ஒட்டிய விநோதமும் நம்முடைய தூத்துக்குடியில்தான் நடந்தது. 2 நாளைக்கு முன்பு, மாஜி அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக "இப்போதைக்கு" இல்லை என்று அறிவித்தார்..
ஒரே நாளில் அதிமுகவின் கோபம் வெளுத்துவிட்டது என்றாலும், ஜெயக்குமார் கூட்டணி தொடர்பாக அறிவித்த அன்றைய தினமே அதிமுகவில் பல நிர்வாகிகள் இந்த முடிவை வரவேற்றனர். அதை போஸ்டர் அடித்தும் ஒட்ட துவங்கிவிட்டார்கள் அதிமுகவினர்.. குறிப்பாக, தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில், ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், மொத்த பேரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
ஆடு மேய்க்க விட்டு: அதில், "ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்டணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம் நமதே" என்ற வாசகங்கள் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் அண்ணாமலையை சீண்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.. அதுவும் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன..
இன்று மய்யம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. கமல் தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது.. கூட்டணி தொடர்பாகவும் இதில் ஆலோசித்திருப்பதாக தெரிகிறது.. முன்னதாக, மநீம கூட்டத்தையொட்டி, கோவை பகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
அதில், "யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமயமலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!" என்று மக்கள் நீதி மய்யத்தினர் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்..
பிரம்மாண்டம்: கோவையில் கடந்த சில மாதங்களாகவே, இப்படியான பிரம்மாண்ட போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி தங்களது ஆதரவை தெரிவிக்கவும், இதுபோன்ற போஸ்டர்களை அந்தந்த கட்சியினர் அடித்து வருகிறார்கள். அந்த வகையில்தான் மய்யம் சார்பிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இதே கோவையில்தான், கடந்த முறை தேர்தலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் களமிறங்கி, நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டார். அநேகமாக, இந்த முறையும் இதே கோவையில் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. எனினும். கமல்ஹாசனை வரவேற்கும் விதமாக கோவை தெற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்கள் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
போஸ்டர்கள்: ஆக மொத்தம், இந்த கொங்கு மண்டலத்தைதான், திமுகவும் குறி வைக்கிறது, அதிமுகவும் குறி வைக்கிறது, பாஜகவும் குறி வைக்கிறது, மய்யமும் குறி வைக்கிறது.
எனினும், கோவை உள்ளிட்ட கொங்குமண்டல போஸ்டர்களில் கடுமையாக விமர்சிக்கப்படுவது, பெரும்பாலும் பாஜகவாக இருந்து வருவதுடன், அண்ணாமலையையே சீண்டி, பெரும்பாலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.. அதேசமயம், இதெல்லாம் அக்கட்சியின் வளர்ச்சியின் அறிகுறியாகவும் பார்க்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது..!!!
சூசகம்: இந்த போஸ்டருக்கு பின்னால் இன்னொரு காரணமும் உள்ளதாம்.. இன்று நடந்த கூட்டத்தில், கமல் பேசும்போது, "கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூக்குடைபட்டேன். மீண்டும் மருந்து தடவி மீண்டும் கோவையில் போட்டியிட தயாராக உள்ளேன்'' என்றாராம், அதாவது, மறுபடியும் இதே கோவையில் கமல் களமிறங்குவதால், பாஜகவுக்கு வைக்கப்படும் செக்காகவே இது பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications