Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையே மிரளுது.. கல்யாணத்துக்கு முன்பே "சம்பவம்".. அதிர்ந்த மணப்பெண்.. யாரந்த மாமனார்? பரிதாப மாப்ளை

Subscribe to Oneindia Tamil

கோவை: திருமணத்துக்கு தயாராகவிருந்த, ஒரு கல்யாண பெண்ணும், இன்னொரு கல்யாண மாப்பிள்ளையும் நொந்து போயிருக்கிறார்கள்.. இன்றைய தினம் முகூர்த்த நாளில், அப்படி என்ன நடந்துவிட்டது?

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ்.. 25 வயதாகிறது.. இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய 2 வீட்டார்களும் முடிவு செய்தனர்.. பிறகு, ஆகஸ்ட் 21ந் தேதியான அதாவது இன்றுதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Coimbatore incident and what happened to Kovai Bride groom and Sulur groom

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருமே திருமண வைபத்துக்கு தயாராகி கொண்டிருந்தனர். அப்போது, மாப்பிள்ளை பூமிராஜ், தனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டார்.. ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக அடுத்த குண்டை தூக்கிப்போட்டார்.

பிடிக்கவில்லை: அதாவது 2 நாட்களுக்கு முன்பே, பெற்றோர் பார்த்த பெண்ணை பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், திருமணம் ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டது. கல்யாண பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டு விட்டது. கடைசி நேரத்தில் இப்படி சொன்னால் எப்படி? பொண்ணு வீட்டில் என்ன சொல்வது? என்று சத்தம் போட்டுள்ளனர்.

இதனால் செய்வதறியாது விழித்த பூமிராஜ், பெற்றோரை சமாதானப்படுத்தும் வகையில், நீங்க பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி உள்ளார். பிறகு, நண்பர்களுக்கு பத்திரிகை தந்துவிட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார். அதோடு சரி.. வீட்டுக்கு வரவில்லை. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பூமிராஜ்: பிறகு திடீரென பூமிராஜ், தன்னுடைய காதலியுடன் கல்யாணம் செய்துகொண்ட போட்டோவை நண்பர்களுக்கு அனுப்பி இதனை வீட்டில் தெரிவிக்குமாறு சொல்லியிருக்கிறார்.. அத்துடன், பெற்றோரிடம் தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும், தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இந்த அதிர்ச்சியே இன்னும் அகலாத நிலையில், இதோ இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

கோவை சூலூரை சேர்ந்தவர் அந்த தொழிலதிபர்.. 3 மாதங்களுக்கு முன்பு, இவர் தன்னுடைய மகனுக்கு, ஒரு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தார்.. 2 வீட்டு தரப்பிலும் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.. கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தார்கள்.. இந்த ஜோடிக்கும் இன்றுதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஷேவிங்: ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொழிலதிபர், தன்னுடைய மகனிடம், "கல்யாணம் நடக்க போகிறது.. உன் தாடியை எடுத்து விடு.. தாடி எடுத்தால்தான் உனக்கு நன்றாக இருக்கும்" என்றாராம்.. உடனே மகனும், ஒரு சலூன் கடைக்கு போயுள்ளனர். அந்த நேரம் பார்த்து, கல்யாணபெண்ணிடமிருந்து போன் வந்துள்ளது.

"எங்கே இருக்கிறாய்" என்று கேட்டதற்கு தாடி ஷேவ் செய்வதற்காக, சலூனுக்கு வந்திருப்பதாக சொல்லி உள்ளார் மாப்பிள்ளை. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கல்யாண பெண், "வேணாம்... உங்களுக்கு தாடி அழகாக இருக்கு.. அதை எடுக்க வேண்டாம்.. டிரிம் மட்டும் செய்து கொள்ளுங்கள் என்றாராம். இதைக்கேட்டு உச்சிக்குளிர்ந்து போன மாப்பிள்ளை, மணப்பெண்ணின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்தார்..

பிறகு வீட்டுக்கு வந்தார்.. அப்போது, அவரது அப்பா வீட்டில் இருந்தார்.. மறுபடியும் தாடியுடன் வந்து மகன் நிற்பதை பார்த்ததுமே கொந்தளித்துவிட்டார்.. அவ்வளவு தூரம் சொல்லியும்கூட, ஏன் தாடியை எடுக்கல? என்று கேட்டார்.

ஆத்திரம்: நான் தாடி வைத்தால்தான், கல்யாண பெண்ணுக்கு பிடித்திருக்கிறதாம்.. அதனால்தான், தாடியை டிரிம் செய்ததாக சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டும் அவரது அப்பா மேலும் ஆவேசமானார்..
நான் தாடியை ஷேவ் பண்ண சொன்னால், நீ அந்த பெண்ணுக்காக, டிரிம் செய்திருக்கிறாய்? என் பேச்சை மதிக்கல? என்று ஆக்ரோஷமாக கத்தி உள்ளார்.. இதனால் மாப்பிள்ளைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. யார் பேச்சை கேட்பது என்றும் தெரியவில்லை. அப்பாவை சமாதானப்படுத்தியும் அவர் கோபம் தணியவில்லை..

வீட்டு வாசலில்: கல்யாணம் ஆக போகும் மகன் என்றுகூடா பார்க்காமல், மகனை வெளியே தள்ளி கதவை பூட்டிக்கொண்டார்... இதனால் புது மாப்பிள்ளை நைட் முழுவதும் வீட்டு வாசலிலேயே படுத்து கிடக்க நேரிட்டது.

பிறகு மறுநாள் காலையில், மணப்பெண்ணுக்கு போனை போட்டு, நடந்த விஷயத்தையெல்லாம் சொன்னார்.. எப்படியாவது தன்னுடைய அப்பாவை சமாதானப்படுத்தும்படி, அந்த பெண்ணை கேட்டுக் கொண்டார். மணமகளும், வருங்கால மாமனாரை சமாதானப்படுத்த, மணமகனின் வீட்டுக்கு கிளம்பி வந்து, அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர் சமரசம் ஆகவில்லை.. இதற்கு பிறகு, திடீரென அந்த கோபக்கார அப்பா, வீட்டை வீட்டே போய்விட்டார்..
பேஸ்புக் பதிவு: அதுமட்டுமல்ல, தன்னுடைய ஃபேஸ்புக்கில் அதிரடி அறிவிப்பு ஒன்றையும் பதிவு செய்தார்.. அதில், "என் மகனின் திருமணம் நின்று விட்டது.. அதனால், திருமண மண்டபத்துக்கு யாரும் வராதீங்க" என்று பதிவிட்டார்.

இதைப்பார்த்ததும், மாப்பிள்ளை உட்பட மணமகளின் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தனர். இன்றுதான் திருமணம் என்பதால், திட்டமிட்டபடி நடக்கவில்லை.. இப்போது, ஊர்பெரியவர்களும், 2 குடும்பத்தை சேர்ந்தவரும் கிளம்பி வந்து, அந்த தொழிலதிபரை சமாதானம் செய்து வருகிறார்கள்..

கடுங் கோபக்காரர்: இந்த கோபக்கார அப்பா எப்பவுமே இப்படித்தானாம். எதுக்கெடுத்தாலும் கோபப்படுவாராம்.. மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவாராம். அதனால் தன்னிடம் வேலைபார்க்கும் ஊழியர்கள்கூட கண்டிப்பாக ஷேவ் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம்..

முடியையும் நீளமாக வளர்க்க கூடாது என்று அவர்களிடமும் சொல்லிக் கொண்டே இருப்பாராம். அப்படியிருக்கும்போது, பெற்ற மகனே தாடி வைப்பதை இவரால் ஏற்க முடியவில்லையாம்.

கல்யாணம் நடக்க போகிறது என்பதாலும், மணப்பெண்ணுக்கு தாடி வைத்தால் பிடிக்கும் என்பதாலும்தான், கடந்த சில நாட்களாகத்தான் தாடி வளர்க்க துவங்கினாராம் மாப்பிள்ளை.. அதற்கான காரணத்தை சொல்லியும்கூட, அதை ஏற்காமல், ஆத்திரமடைந்து, திருமணத்தையும் நிறுத்தி விட்டதாக சொல்கிறார்கள்.. இருந்தாலும், அப்பாவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது என்கிறார்கள். அந்த புது மாப்பிள்ளையோ, அதிர்ச்சி உறையாமல் உட்கார்ந்துள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+