கோவை கேபிஆர்.. அன்று 8000 கடன்காரர்.. இன்று இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கேபி ராமசாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.. உயர்கல்வி எல்லாம் படிக்கவில்லை.. வேலை கொடுக்க வேண்டும் என்ற உறுதி இருந்தது. மில் ஆரம்பித்தார். ஆரம்பிக்கும் போது, சொற்ப எண்ணிக்கை மிஷினை வைத்து 1996ல் ஆரம்பித்தார். முன்பு ஆரம்பித்தார். மெல்ல மெல்ல வளர்ந்தார். பெரிய அளவில் வளர 30 கடுமையாக வருடம் உழைத்தார். அதனால் இன்று இந்தியாவின் டாப் 100 செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கிறார். வெறும் 8000 கடன் வாங்கி நிறுவனம் ஆரம்பித்த கேபி ராமசாமியின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 30000 கோடி ரூபாய் ஆக உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் எளிய குடும்பத்தில் பிறந்த கேபி ராமசாமி, இளமையில் வறுமையை எதிர்கொண்டவர். கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார். ஆனாலும் எபபடியாவது பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக கடுமையாக உழைத்தார். அத்துடன் எப்படி முன்னேறி விடுவோம் என்று அசைக்க முடியாத உறுதியுடனும், சுய ஒழுக்கத்துடனும் பயணித்தார். தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டார்.

Forbes Coimbatore assets

ஒரு கட்டத்தில் தனது தாய் மாமாவிடமிருந்து கே.பி.ராமசாமி பெற்ற ரூ.8,000 கடன் பெற்று ஜவுளி துறையில் இறங்கினார். படிப்படியாக வளர்ந்து 1996ம் ஆணடு கேபி ராமசாமி, தனது முதல் ஸ்பின்னிங் மில்லை நிறுவினார். மில் தொடங்கியதுமே, படிப்படியாக சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் வேலை தேடி மில்லுக்கு வந்தனர். அவர்களுக்கு வேலை கொடுத்தார். படிப்படியாக பெண்களுக்கே தனது நிறுவனத்தில் முன்னுரிமை அளித்தார்.

அப்படி வேலை கொடுத்து நிறுவனம் வளர்ந்து வந்த நிலையில், சில பெண்கள், படிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார்கள். இதையடுத்து பெண் ஊழியர்களுக்கு தொழில், கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கான பயிற்சித் திட்டங்களைத் தொடங்கினார். பலர் வறுமையில் கேபிஆர் மில்லுக்கு வேலைக்கு வந்தாலும், அங்கு வேலை செய்து கொண்டே படித்து முன்னேறி நல்ல நிலையை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வறு கிராமங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு நர்சிங் பயிற்சி, கணினி பயிற்சி, தொழில் பயிற்சி, உயர் கல்வி வசதிகளை செய்து வருகிறார். சுமார் 10 லட்சம் பெண்கள் வரை இந்த நிறுவனத்தால் பயன்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வணிக ரீதியாக கேபிஆர் நிறுவனம் ஆண்டுக்கு 6000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. இவரது நிறுவனங்களில் 30000 பேர் பணியாற்றி வருகிறார்கள். உலக அளவில் ஃபாசோ பிராண்டின் கீழ் உள்ளாடைகள் மற்றும் விளையாட்டு ஆடைகளையும் தயாரிக்கிறது. கேபிஆர் நிறுவனம் ஆண்டுக்கு 177 மில்லியன் பின்னலாடைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 15 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இன்றைக்கு சுமார் 30000 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் கேபி ராமசாமி இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+