கோவை லோக்சபா தொகுதி.. புதிய சரித்திரம் எழுதப் போவது யார்? திமுக- அதிமுக- பாஜக இடையே செம்ம மோதல்!
கோவை: கோயம்புத்தூர் (கோவை) லோக்சபா தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இத்தொகுதி கவனம் பெற்றுள்ளது. 7 முறை இடதுசாரிகளும் 5 முறை காங்கிரஸும் வென்ற தொகுதி என்பதால் திமுக- அதிமுக- பாஜக இடையே மிகக் கடும் போட்டி நிலவுகிறது.
கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர்,
பல்லடம். கோவை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. இடதுசாரிகள் 7 முறை வென்ற தொகுதி. திமுக 2 முறை, பாஜக 2 முறை வென்ற தொகுதி. அதிமுக ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

கோவை தொகுதி மொத்த வாக்காளர்கள்- 20,83,034; ஆண்கள்- 10,30,063; பெண்கள்- 10,52,602; 3-ம் பாலினத்தவர்- 369
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி. ஆர். நடராஜன்(சிபிஎம்) 2,93,165
இரா. பிரபு(காங்கிரஸ்) 2,54,501
ஈஸ்வரன்(கொமுபே) 1,28,070
ஆர். பாண்டியன்(தேமுதிக) 73,188
செல்வகுமார்(பாஜக) 37,909
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
நாகராஜன்(அதிமுக) 4,31,717
சிபி இராதாகிருஷ்ணன்(பாஜக) 3,89,701
கணேஷ்குமார்(திமுக) 2,17,083
இரா. பிரபு(காங்கிரஸ்) 56,962
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி. ஆர். நடராஜன்(சிபிஎம்) 5,71,150
இராதாகிருஷ்ணன்(பாஜக) 3,92,007
மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) 1,45,104
கல்யாணசுந்தரம்(நாம் தமிழர் கட்சி) 60,519
அப்பாதுரை(அமமுக) 38,061
2024 தேர்தலில் களம் காண்பவர்
கணபதி ராஜ்குமார் (திமுக)
சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக)
அண்ணாமலை (பாஜக)
கலாமணி ஜெகநாதன் (நாம் தமிழர் கட்சி)
கோவை கள நிலவரம் என்ன?: கொங்கு வேளாள கவுண்டர், அருந்ததியினர், நாயுடு, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கணிசமான வாக்காளர்கள். சிறுபான்மையினரின் 12% வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பவை. கோவை லோக்சபா தொகுதியில் இடதுசாரிகள் 7 முறையும் அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் 5 முறையும் வென்றுள்ளது. பாஜகவும் இங்கு 2 முறை வென்றுள்ளது. இம்முறை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கு களம் காண்கிறார். இதனால் தமிழ்நாடு மட்டுமல்ல தேசிய அரசியலும் கோவை தொகுதியின் முடிவுகளை பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கோவையில் திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார், அதிமுகவில் மேயராக இருந்தவர். காங்கிரஸும் இந்த தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டது; இடதுசாரிகளுக்கும் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. இவை அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின் பாஜக வலுவாக காலூன்றி நிற்கிறது. அண்ணா திமுகவும் கோவையை தங்களது வலுவான பகுதியாக உருவாக்கி வைத்துள்ளது. கோவை லோக்சபா தொகுதியில் வெல்லப் போவது யார் என்பது கணிக்க முடியாத யூகத்துக்கு உரிய தொகுதியாக உள்ளது.












Click it and Unblock the Notifications