கிளாம்பாக்கம், கோவை, மதுரை, ஆவடி.. அடுத்த 8 மாதத்தில்.. தீவிரமாக தொடங்கப்படும் 4 மெட்ரோ பணிகள்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: 2026ம் ஆண்டு தேர்தல் நடப்பதற்கு முன் தமிழ்நாட்டில் நான்கு முக்கிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு மெட்ரோ திட்டங்களில், கோயம்புத்தூர் மெட்ரோ மற்றும் மதுரை மெட்ரோ ஆகியவற்றுக்கான பணிகள் முதலில் தொடங்கப்படும். இதற்கான மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள இரண்டு திட்டங்களான கோயம்பேடு-ஆவடி மெட்ரோ மற்றும் விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல்கள் பின்னர் பெறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள், பரந்தூர் புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய பின்னரே, தேர்தலுக்குப் பிறகு ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

coimbatore metro

கிளாம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ

சென்னை விமான நிலையம் - கிளம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்து ₹1,964 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 15.46 கி.மீ. நீளமுள்ள இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பயன்பாட்டுப் பணிகளுக்கான ஆரம்பக்கட்டப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த வழித்தடம், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் நீட்டிப்பாக அமையும். முதற்கட்டத் திட்டம், சென்னை விமான நிலையத்தை வட சென்னையுடன், சென்னை சென்ட்ரல் வழியாக நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் இணைக்கிறது. கிளம்பாக்கம் வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்பட்டால், கிளம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் இணைக்கப்படும்.

இந்த 15.46 கி.மீ. நீள வழித்தடத்தில், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரை 12.64 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்டச் சாலையும் அமைக்கப்படவுள்ளது. இந்த நீட்டிப்புத் திட்டத்தின் மொத்தச் செலவு ₹9,335 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயர்மட்டச் சாலையின் கட்டுமானச் செலவு ₹2,281 கோடி அடங்கும்.

கிளம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் போக்குவரத்து ஒரு பெரிய சவாலாக உள்ளது. தற்போது, கிளம்பாக்கம் செல்ல எம்.டி.சி பேருந்துகள் மட்டுமே ஒரே வழி. இனி அந்த பிரச்னையை சரி செய்ய மெட்ரோ இந்த ரூட்டில் அமைக்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ பணிகள்

கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கான இறுதி விரிவான நிலத் திட்ட அட்டவணையை (LPS) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) இரண்டு மாதங்களுக்குள் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட இரண்டு வழித்தடங்களுக்கான செலவு மற்றும் கையப்படுத்தப்பட வேண்டிய நிலங்களுக்கான விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

இத்திட்டத்தில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் அருகிலுள்ள கோயம்புத்தூர் விமான நிலையம் வரை நீண்டுள்ள முதல் வழித்தடமும், கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வாலியம்பாளையம் பிரிவு வரை நீண்டுள்ள இரண்டாம் வழித்தடமும் அடங்கும். இந்த வழித்தடங்களின் மொத்த நீளம் 40 கி.மீ., இதன் மதிப்பிடப்பட்ட செலவு ₹10,740 கோடி ஆகும்.

கோயம்புத்தூர் மெட்ரோ

டெக்ஸ் டூல்ஸ் பாலம் முதல் சூரியா மருத்துவமனை வரையிலான 1.4 கி.மீ. நீளத்திற்கு அவசர நிலத் திட்ட அட்டவணை (LPS) தயாரிக்கப்பட்டு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதி ஒரு நெரிசல் நிறைய பகுதியாகும். முன்பு, தேவையான நிலம் 20 மீட்டர் அகலமாக குறிப்பிடப்பட்டது. எல்.பி.எஸ். நிறைவடைந்த பிறகு, அது 30 மீட்டராக திருத்தப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதனால் நெரிசல் ஏற்படுகிறது.

1.4 கி.மீ. நீளப் பகுதிக்கு, நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ திட்டம் ஆகிய இரண்டிற்கும் 2.28 ஏக்கர் தனியார் நிலமும், 0.58 ஏக்கர் அரசு நிலமும் தேவைப்படும். மொத்தம் 40 கி.மீ. தூரத்திற்கான இரு வழித்தடங்களுக்கான முதன்மை நிலத் திட்ட அட்டவணை (LPS) நிறைவடைந்துள்ளதாகவும், நிர்வாக ஒப்புதல் (AS) ஆவணங்கள் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மெட்ரோ பாதை

விரிவான நிலத் திட்ட அட்டவணையின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்குள் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டத்தில் அகற்றப்பட வேண்டிய சொத்துக்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படும், தேவையான நிலத்தின் அளவு தீர்மானிக்கப்பட்டு, மற்றொரு இடப்பரப்பியல் வடிவமைப்புடன் சமர்ப்பிப்பதற்கான வகைப்பாடு செய்யப்படும்.

இறுதி கட்டத்தில் சொத்து மதிப்பீடு செய்யப்படும். கள அலுவலர்கள் நிலத் திட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களையும் ஆய்வு செய்து சரிபார்ப்பார்கள். உரிமை, கட்டமைப்பு வகை மற்றும் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மதிப்பீடு செய்யப்படும். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இரு வழித்தடங்களுக்கான இறுதி அறிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+