இதுதான் சொந்த காசில் சூனியம் வைக்கிறதோ.. பாஜகவில் பதவி ஆசை.. சிறையில் கம்பி எண்ணும் கோவைக்காரர்
கோவை: கோவையில் பாஜக கட்சியில் பதவி பெற விரும்பிய நபர், அந்த பதவி தனக்கு கிடைக்காத காரணத்தால், தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடியிருக்கிறார்.. இதை விசாரணையில் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை வசித்து வருபவர் விஸ்வநாதன். இவருக்கு பாஜகவில் பொறுப்பு வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
அதற்காக பாஜக நிர்வாகிகள் உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமாரை சந்தித்து உள்ளார். அவர்கள் இருவரிடமும் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் ஆகிய இருவரும் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஸ்வநாதன் , தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் மீது போலீசில் புகார் தந்திருக்கிறார்.
இது தொடர்பாக இருதரப்பினரையும் நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசின் விசாரணையில், கட்சியின் பதவி பெறும் நோக்கில் இருவர் மீதும் குற்றம் சுமத்தி விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து விஸ்வநாதனை தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலைமுயற்சி என நாடகம் ஆடிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications