கோவை சாய்பாபா காலனி மேம்பால பணி..இரவு நேரத்தில் இந்த வழியா போகாதீங்க..போக்குவரத்தில் முக்கிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெறும் சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஜூன் 23 இரவு முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். எனவே பொது மக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோவை மாநகர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கோயமுத்தூர் - குண்டல்பேட் சாலையில் கோயமுத்தூார் மாநகராட்சிப் பகுதியில் முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் எருக்கம்பெனி முதல் சிவானந்தா காலனி சந்திப்பு வரை கான்கிரீட் தூண்களின் மீது Gider Beam-கள் பொருத்து பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Kovai Flyover work saibaba colony

இதைத்தொடர்ந்து, ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை 28 நாட்களுக்கு மட்டும் இரவு 10.00 மணி முதல் விடியற்காலை 05.00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல் துறை அறிவித்துள்ளது. இரவு 10.00 மணிக்கு வேலையை ஆரம்பித்து அதிகாலை 05.00 மணிக்கு வேலையை முடிக்க வேண்டும். சாலையின் இரண்டு பக்கத்திலும் சிவப்பு விளக்குகள், மற்றும் Warming Tape Reflector Cone வைத்து தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வேலை செய்ய வேண்டும்.

சாலையைத் தோண்டி வேலை செய்யும் வேலை ஆட்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்தல் வேண்டும். வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படும் போது, Reflective Jacket உடன் பணி ஆட்களை நியமித்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல முறையாக அறிவுறுத்தப்பட வேண்டும். சாலையைத் தோண்டி வேலை செய்யும் போது, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல முறையான அறிவிப்பு பல்கைகள் Direction boards மற்றும் Barricade கள் வைத்திருக்க வேண்டும்.

சாலையைத் தோண்டி செய்த பின்னர், அந்த இடத்தை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு முழுமையாக சமன் செய்ய வேண்டும். பணியின் போதோ அல்லது பணி முடித்த பிறகோ சாலையை சரியாக சமன் செய்யாததால் ஏதேனும் விபத்துகள் ஏற்படும்பட்சத்தில், அதற்கு சம்மந்தப்பட்ட Contractor மற்றும் Supervisor ஆகியோர் முழு பொறுப்பாவீர்கள்.

சாலையைத் தோண்டி வேலை செய்யும் போது அடியில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள், மின்சார இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் பிற Fiber Cable இணைப்புகளுக்கு எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடாது அவ்வாறு பணியின் போது ஏதேனும் இணைப்புகள் பழுதடையும்பட்சத்தில் அதற்கு Supervisor ஆகியோர் முழு பொறுப்பாவீர். இந்த அனுமதியினை வேறு பணிக்கு உபயோகித்தல் கூடாது

பணி முடிந்ததும் குழியை நன்கு மூடி சாலையை சமன் செய்து மேற்படி இடத்தில் கான்கிரீட் தளம் போடப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்படும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக இந்த அனுமதி ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகர போக்குவரத்து மேற்கு பிரிவு காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் C3 சாய்பாபா காலனி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகியோர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கண்ட பகுதியில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணித்து வரவும், மேற்கண்ட பகுதியில் சாலையைத் தோண்டும் போதும், சாலையை முடும் போதும் கண்காணித்தும், பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிக்கையாக அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை 28 நாட்களுக்கு மட்டும் இரவு 10.00 மணி முதல் விடியற்காலை 05.00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+