கோவை சரண்யாவுக்கு காதல் கணவனுடன் பிரச்சனை - கள்ள காதலன் மூலம் பக்காவாக செய்த சம்பவம்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே சதீஷ்குமார் என்பவர் கள்ளக் காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சதீஷ் மனைவின் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், எஸ்.குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சரண்யா என்பவரை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்க 9 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பாட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சரண்யா பிரிந்து சென்று தன்னுடைய தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

கணவன் - மனைவி பிரச்சனை
சதீஷ்குமார் அவ்வபோது அங்கு சென்று தன்னுடைய குழந்தைகளை பார்த்துவிட்டு வருவார். இதனிடையே சரண்யாவிற்கும் அவரது உறவினரான முருகன் என்பவருக்கும் கள்ள காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது தொடர்பு குறித்து சமீபத்தில் சதீஷ்குமாருக்கு தெரிந்துள்ளது. இதனால் குடும்பத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி, மதியம் செஞ்சேரிமலை டாஸ்மாக் கடைக்கு முருகன் சென்றுள்ளார்.[Coimbatore Murder]
அவருடன் அவரின் நண்பர்கள் கோபிநாத், சிவலிங்கம், 17 வயது சிறுவன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். பிறகு சதீஷ்குமார் தன்னுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்காக குமாரபாளையம் சென்றுள்ளார். இதுகுறித்து சரண்யா முருகனுக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். சதீஷ்குமார் அங்கிருந்து புறப்பட்டபோது அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பயணித்துள்ளார்.
கடத்தி சென்று கொலை
திடீரென அந்த வழியாக காரில் வந்த முருகன் உள்ளிட்ட 4 பேர், சதீஷ்குாரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்து, சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அங்கு வாய்க்கால் கரையில் அமர்ந்து மீண்டும் மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து சதீஷ்குமாரை பீர் பாட்டிலால் தலையில் கடுமையாக தாக்கி பிஏபி வாய்க்காலில் தள்ளியுள்ளனர்.
இது தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருப்பூர் மாவட்டம் நாதேகவுண்டன்பாளையம் பிஏபி வாய்க்காலில் நேற்று ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. திருப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது. அது சதீஷ்குமாரின் உடல் என்பதை அவரின் தந்தை மயில்சாமி உறுதி செய்தார்.
3 பேர் கைது
இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலைக்கு காரணமான முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணம் கடந்த உறவின் காரணமாக கணவனைத் திட்டமிட்டு கடத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications