கோவை வடக்கு தொகுதியை கைக்கழுவிய அதிமுக.. வசமாக சிக்கிக் கொண்ட பாஜக
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் கோவை வடக்கு தொகுதியில் அதிமுகவின் செயல்பாட்டால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வானதி சீனிவாசன், திமுகவில் துரை செந்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சியில் நர்மதா, தவெகவில் சம்பத்குமார் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கோவை வடக்கில் தான் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது.

களமிறங்கிய திமுக
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி, இந்தமுறை வடக்கு தொகுதியில் போட்டியிட்டிருப்பதால் அங்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் வானதியை எதிர்த்து திமுக களமிறங்கவில்லை. கோவையில் பாஜகவை வெற்றி பெற வைக்க கூடாது என்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் பாஜக அண்ணாமலைக்கு எதிராக திமுக களமிறங்கியது.
அதேபோல இந்தமுறை வானதிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கு வானதி சீனிவாசன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிமுக பலமாக உள்ள பகுதி என்பதால் அங்கு திமுகவுக்கு கடுமையான போட்டி இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் வானதி சீனிவாசனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, அதிமுகவின் உள்கட்சி அரசியல் அங்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காய் நகர்த்திய சந்திரசேகர்
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது வானதி சீனிவானுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அதிமுக அங்கு அமைதியாகிவிட்டது. கோவை வடக்கு தொகுதியில் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று அதிமுகவில் வேலுமணியின் தீவிர ஆதரவாளர் சந்திரசேகர் காய் நகர்த்தினார்.
ஆனால் தொகுதி கூட்டணிக்கு வழங்கப்பட்டதால் அவர் அதிருப்தியடைந்தார். உள்கட்சி பிரச்சனையை சரி செய்வதற்காக அதிமுக தலைமை கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளராக சந்திரசேகரை நியமித்தனர். அது நடவடிக்கை பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அங்கு அதிமுக சரியாக பணியாற்றவில்லை. வடக்கு தொகுதியில் வட மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
சொதப்பிய அதிமுகவினர்
மக்கள் அதிகம் கூடும் முக்கிய சந்திப்புகளில் பிரச்சாரம் நடத்தப்படவில்லை. அதிமுக பாஜக வலுவாக வடவள்ளி பகுதியில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 20 சங்கங்களை மட்டும் தான் அதிமுக - பாஜக சந்தித்து ஆதரவு கோரினர். அவர்களை நம்பி பயனில்லை என்று ஒரு கட்டத்தில் வானதியின் கணவர் சீனிவாசன் தொகுதியின் முக்கிய முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.
பணப்பட்டுவாடாவிலும் அதிமுகவினர் சொதப்பிவிட்டனர். அதே வடக்கு தொகுதியில் திமுகவினர் ஒரு வாக்குக்கு ரூ.2,500 மற்றும் தங்க காயினுக்கான டோக்கனை வீடு வீடாக கொடுத்தள்ளனர். அதிமுகவில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுக்கப்பட்டது. சீனியர்கள் இருந்தும அனுபமில்லாதவர்களிடம் பட்டுவாடாவுக்கான பொறுப்பை கொடுத்ததால் பணம் சரியாக சென்று சேரவில்லை" என்றனர்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications