கோவையில் நாளை வரும் முக்கிய மாற்றம்.. இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. இதுதான் இங்க விஷயமே!
கோவை: போக்குவரத்து நெரிசல் என்பது கோவையில் தவிர்க்கவே முடியாத பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், முக்கிய பகுதியில் நாளை முதல் டிராபிக் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. புறநகர் ரயில், மெட்ரோ என பொது போக்குவரத்து இல்லாததால் பலரும் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்..

இதனால் கோவையில் டிராபிக் என்பது மோசமான பிரச்சினையாக இருக்கிறது. இதனால் கோவையில் டிராபிக் பிரச்சினையைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை: குறிப்பாக டிராபிக் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதிதாகப் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அடுத்த வாரம் சோதனை ஓட்டத்திற்காகத் திறக்கப்படும் என தெரிகிறது. கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாகக் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பதி தெரிவித்துள்ளார்.
நாளை திறப்பு: இந்தப் பாலத்தில் நாளை டிச. 11ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், 1.85 கிமீ நீளமுள்ள மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளில் கடந்த வாரம் தான் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "முக்கியமான கட்டுமான பணிகள் முடிந்துவிட்டது. இதன் காரணமாக சர்வீஸ் சாலைகளில் போக்குவரத்தை அனுமதித்தோம். மொத்தம் ₹ 115 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலம், இந்த வாரம் சோதனை ஓட்டத்திற்குத் திறக்கப்படும் என நினைக்கிறோம்" என்றார்.
இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த நிலையில், இதைக் கட்டுப்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேம்பாலம் திறக்கப்பட இருக்கிறது.
முக்கிய மேம்பாலங்கள்: அதேபோல கோவையில் மேலும் இரண்டு முக்கிய மேம்பாலப் பணிகளும் நடந்து வருகிறது. அதில் ஒன்று உக்கடம் மேம்பாலம்.. இந்த பாலத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் அடுத்த மாதம் 2ஆவது அல்லது 3ஆவது வாரத்தில் இந்த கட்டுமான பணிகள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. 3.8 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 85% முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இன்னும் அடுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதுவும் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாலம் போக்குவதிற்குச் சீக்கிரம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவினாசி மேம்பாலம்: அதேபோல நகரில் நடந்து வரும் மற்றொரு முக்கிய மேம்பால கட்டுமானம் என்றால் அது அவினாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளே இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் முடிவடையும் எனத் தெரிகிறது. 10.1 கி.மீ. நீளத்தில் நான்கு வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் கோவையில் மிகப் பெரிய மேம்பாலமாக இருக்கும்.
இதில் 6 ரேம்புகள் உடன் 1,620 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம், 60% பணிகள் முடிந்துவிட்டதாகவும் ஐந்தாவது வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications