Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் அலுவலகத்தில் இருந்து பறந்த உத்தரவு.. கோவை மேம்பாலத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால் போக்குவரத்து சரியானதோ, இல்லையோ சர்ச்சைகளும், புகார்களும் அதிகம் வெடித்து கொண்டிருக்கின்றன. பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் முறையாக கட்டப்படாததால் ஏராளமான ஊழல் புகார்கள் முன் வைக்கப்பட்டன. இதை சரி செய்ய தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு ஆபத்து நிறைந்த பகுதியில் பிரச்சனையை சரி செய்யும் விதமாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.8 கி.மீ தொலைவுக்கு, ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. மிகவும் மந்தமாக பணிகள் நடைபெற்றன. ஒருவழியாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

coimbatore-periyanaikanpalayam-to-witness-massive-changes

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்

மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து ஏராளமான புகார்கள் எழுந்தன. மேம்பாலத்தின் மேல் மேடு பள்ளமான சாலை, குளம் போல தேங்கும் தண்ணீர், முறையற்ற திட்டமிடல் ஆகியவற்றால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடங்கி, ஜோதிபுரம் பகுதியில் பாலம் இறங்கும் இடத்தில் பாலத்தை ஒட்டியே ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு கட்டிடம் உள்ளது. அதை அகற்றாமல் பாலம் கட்டியதால் அப்பகுதி மிகவும் குறுகலாக உள்ளது.

பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சர்வீஸ் சாலையும், பாலம் இறங்கும் இடமும் ஒரே இடத்தில் இணைகிறது. இது விபத்து அபாயம் கொண்டது. மேலும் பாலத்தில் மழைநீர் செல்ல எந்த வழியும் இல்லை. சிறிய மழை பெய்தாலே மேம்பாலத்தின் மேல் பகுதியில் குளம்போல தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக மேம்பாலத்தில் விளக்குகள்கூட அமைக்கவில்லை.

பாலத்தில் ஊழலா

இந்த மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் புகார் எழுந்தது. பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் இந்திய சாலை காங்கிரஸ் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் வரை புகார் சென்றது. பிரதமரே திறந்து வைத்த மேம்பாலத்தின் நிலை இப்படியாக என்று அதிர்ச்சி எழுந்தது. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தன.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் தொடர்பாக ஒரு ஐஎஸ்ஏ அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் சாலைகள் திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன் என்கிற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இந்த பிரச்சனையை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

நிலம் கையகப்படுத்தும் பணி

அதனடிப்படையில் பாஸ்கர பாண்டியன் விசாரணை நடத்தியுள்ளார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அங்கு விபத்தை ஏற்படுத்டுதும் அபாயம் உள்ள பகுதியை சரி செய்ய ரூ.7.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 7.5 சென்ட் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த ரூ.1.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கு 400 மீ தொலைவு சர்வீஸ் சாலை அமைக்கப்படவுள்ளது.

முதலில் நாங்கள் அதை ஆக்கிரமிப்பு கட்டிடம் என்று நினைத்தோம். பிறகு தான் அது பட்டா நிலம் என்று தெரிந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் இதர பணிகளை நிறைவு செய்ய திட்டமிடுள்ளோம்." என்றனர். இதன்மூலம் பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+