அழகான பெண்கள், ஆணழகன்கள்.. பொள்ளாச்சி குரூப்பின் பொல்லாத வேலை.. மும்பை டூ கோவை.. பின்னணி?
கோவை : சபல ஆசாமிகளை குறிவைத்து ஆன்லைன் 'டேட்டிங்' செயலியில் தங்களிடம் உல்லாசம் அனுபவிக்க அழகிய இளம்பெண்கள், ஆணழகன்கள் உள்ளனர். பணம் செலுத்தினால் ஜாலியாக இருக்கலாம் என்று கூறி அழகிகளின் கவர்ச்சி புகைப்படங்கள், ஆணழகனின் படங்களை வெளியிட்ட மோசடி செய்த இளைஞர்கள் கும்பலை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள், அவர்களை குறிவைத்து டேட்டிங்' செயலியில் அழகிகளின் கவர்ச்சி படங்களை பதிவிட்டு, பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று வலை விரிக்கிறார்கள். சபலப்பட்ட பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்கள்.

போலீசில் புகார்: இப்படி சபலப்பட்டு பணத்தை இழந்தவர்கள் பலரும் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்கள் இந்த புகார்கள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சுகாசினி ஆகியோர் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
வாட்ஸ் அப் மூலமும் ஆன்லைன் மூலமும் அழகிகளின் கவர்ச்சி படங்களை பதிவிடும் கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் இணையத்திலேயே தீவிரமாக தேடி வந்தனர். மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சிலர் அழகிகளின் கவர்ச்சி படங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களின் செல்போன் எண்களை வைத்து மும்பையில் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர். அவர்கள் மும்பை நவிமும்பையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து நவிமும்பைக்கு சென்ற கோவை சைபர் கிரைம் போலீசார் அங்கிருந்த 7 பேர் கும்பலை கைது செய்தனர்.
நவிமும்பை அருகே உள்ள உல்வேயை சேர்ந்த அப்சல் ரகுமான் (வயது 24), விழுப்புரத்தை சேர்ந்த விக்னேஷ் வீரமணி (25), பொள்ளாச்சியை சேர்ந்தவர்களான கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), பிரேம்குமார் (33) ஆகியோர் இந்த பொல்லாத வேலையை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் எப்படி தாங்கள் ஏமாற்றி பணம் பறித்தோம் என்பதை விவரித்தனர். இதன்படி, "ஆன்லைன் 'டேட்டிங்' செயலியில் எங்களிடம் உல்லாசம் அனுபவிக்க அழகிய இளம்பெண்கள், ஆணழகன்கள் இருக்கிறார்கள். பணம் செலுத்தினால் ஜாலியாக இருக்கலாம் என்று கூறி அழகிகளின் கவர்ச்சி புகைப்படங்கள், ஆணழகனின் படங்களை பதிவிடுவோம்.

கவர்ச்சி புகைப்படங்கள்: இதனை பார்த்து உள்ளே செல்லும் சபல ஆசாமிகள் அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசுவாங்க.. இதனை பயன்படுத்தி நாங்கள் பேசும் செல்போன் எண்ணில் பேசுவோம். அதன் 'வாட்ஸ்-அப்'பிற்கு சில இளம்பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைப்போம். பின்னர் நீங்கள் இதில் எந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்புகிறீர்கள் என்றும், அவரை தேர்வு செய்து சொல்லுங்கள் என்றும் கூறுவோம்.
சபல ஆசாமிகள்: இதையடுத்து சபல ஆசாமிகள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து கூறுவார்கள். ஒரு இரவுக்கு ரூ.25 ஆயிரம் இதையடுத்து தான் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரம் பேச ஆரம்பிப்பார்கள். அப்போது ஒரு முழு இரவுக்கு ரூ.25 ஆயிரம் என்றும், ஒரு மணி நேரத்துக்கு ரூ.6 ஆயிரம் என்றும் பேரம் பேசுவாங்க..
வங்கி கணக்கு எண்: பின்னர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, வங்கி கணக்கு எண்ணை அனுப்புவோம். இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க போகிறோம் என்ற சந்தோசத்தில், பெண்ணின் மீதுள்ள மோகத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவாங்க.. கோடிக்கணக்கில் பணம் வந்ததும் ஒரு ஓட்டலை குறிப்பிட்டு, அங்கு இளம்பெண் உள்ளார் அங்கு செல்லுங்கள் என்று போவாங்க..
ஓட்டலில் பெண்கள்: பணம் செலுத்தியவர்கள் இதனை நம்பி ஆசையோடு அங்கு போவாங்க.. முதலில் அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கு போன் செய்யும்போது, இளம்பெண் பிசியாக இருப்பதாக கூறி வெயிட் பண்ணுமாறு கூறுவோம். . சிறிது நேரத்திற்கு பின் போன் செய்தால் 'சுவிட்ச் ஆப்' செய்துவிடுவோம். இதன்பின்னர் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் போய்விடுவார்கள். இவ்வாறு கோவை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவர்கள், சபல ஆசாமிகள் என பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறோம்" என்று அவர்கள் கோவை போலீசாரிடம் கூறியுள்ளனர்.

அவமானம்: பலர் பணத்தை இழந்தாலும், வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கருதி புகாரே கூறவில்லை. இதுதான் இந்த மோசடி கும்பலுக்கு சாதகமானது. இந்நிலையில் கோவை போலீசாரார் கைது செய்யப்பட்ட 7 பேர் கும்பலிடம் இருநது 36 சிம்கார்டு பறிமுதல் செய்த போலீசார், போலி ஆவணங்கள் மூலம் பல வங்கி கணக்குகள் தொடங்கியதை விசாரணையில் கண்டுபிடித்தனர். இதேபோல பல பெயர்களில் சிம் கார்டுகள் வாங்கி மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வங்கி கணக்கில் இருந்த ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 958 முடக்கிய போலீசார் அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள், 12 வங்கி புத்தகங்கள், 36 சிம்கார்டுகள், 19 ஏ.டி.எம் கார்டுகளும் பறிமுதல் செய்தார்கள். கைதான 7 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications