கோவையில் வரும் புதிய சோதனை சாவடி.. ஈச்சனாரி அருகே நடக்கும் அதிரடி மாற்றம்
கோவை: கோவையின் புறநகர் பகுதியான எட்டிமடை - வாளையார் இடையேயான பகுதியில், சமீபகாலமாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்ததை அடுத்து குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க எட்டிமடையில் சோதனை சாவடி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சோதனை சாவடி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். சேலத்தில் இருந்து கோவை வழியாக கொச்சிக்கு செல்லும் இந்த பைபாஸ் சாலையில் அதிக அளவில் வழிபறி சம்பவங்கள் நடந்து வந்ததால், போலீஸ் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
கேரளாவின் நுழைவு வாயிலாக உள்ள கோவை மாநகரம், கொங்கு மண்டலத்தின் முக்கியமான நகரம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். தமிழ்நாட்டின் அதிக அளவில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள நகரமாக இருக்கிறது. சென்னையில் எப்படி ஆட்டோமொபைல் தொழிலும், ஐடி தொழிலும் பிரபலமோ, அதுபோல் கோவையில் ஜவுளி தொழிலும், கனரக வாகனங்கள், கிரைண்டர், மிக்ஸி, பைப், இரும்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் அடங்கிய நகரமாக இருக்கிறது. அதேபோல் கடந்த 15 வருடங்களில் ஐடி தொழிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவை மாநகருக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கிறார். இதுதவிர கோவை வழியாக கேரளாவிற்கு பலரும் சென்று வருகிறார்கள்.

கோவை பைப்பாஸ் சாலை
கோவை மாநகரத்திற்கு தொலைநோக்குடன் பைபாஸ் சாலை 25 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டன. அதாவது
சேலத்தில் இருந்து கோவை வழியாக கொச்சிக்கு பைபாஸ் ரோடு 1999ம் ஆண்டிலேயே அமைக்கப்பபட்டது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரளாவில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னை செல்பவர்கள் இந்த ரோட்டில்தான் சென்று வருகின்றனர்.
சோதனை சாவடி
இந்த சாலை கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி அருகே வடுகபாளையம் பிரிவில் இருந்து தொடங்கி, வாளையாறு சோதனை சாவடி வரை போகிறது. இதில் நீலாம்பூரில் இருந்து சிறிது தூரம் கோவை மாநகர் எல்லைக்குள் இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி பிரிவில் இருந்து வாளையாறு சோதனை சாவடி வரை உள்ள பகுதிகளில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் உள்ளது.
வழிபறி சம்பவங்கள்
குறிப்பாக கடந்த மாதத்தில் மட்டும் நகை வியாபாரியிடம் ரூ.1¼ கோடி தங்க கட்டிகளும், நகைப்பட்டறை ஊழியரிடம் ரூ.30 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதவிர ஹவாலா பணத்தை கொள்ளையடிப்பது, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் மட்டுமே நடந்துள்ளன. இதை தடுக்க போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள். ஆனால் குற்ற சம்பவத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.
எட்டிமடையில் சோதனை சாவடி
இதையடுத்து எட்டிமடையில் உள்ள மேம்பாலத்தின் முன்பு சர்வீஸ் ரோடு தொடங்கும் இடமான காளியாபுரம் அருகே சோதனை சாவடி அமைக்க கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறும் போது, எட்டிமடை - வாளையார் இடையேயான பாதை, 10 கி.மீ., நீளமுடையது. இதில் ஏற்கனவே வாளையார், வேலந்தாவளம் பகுதிகளில் இரு சோதனை சாவடிகள் இருக்கின்றன. இங்கு போலீசார் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். எட்டிமடையில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பிரத்யேகமாக சப் இன்ஸ்பெக்டர், தலைமையில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. சோதனை சாவடிகளில் வாகனத் தணிக்கை நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.
பணிகள் தொடங்கியது
அதை தொடர்ந்து எட்டிமடையில் மேம்பாலம் அருகே சோதனை சாவடி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் கன்டெய்னரை வைத்து, அதற்கு போலீஸ் நிலையம் போல் வர்ணம்பூசி, அதில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை அமைக்கும் பணி நடக்கிறது. சேலம்-கொச்சி புறவழிச்சாலையில் ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி பிரிவு முதல் எட்டிமடை வரை, எட்டிமடை முதல் வேலந்தாவளம் வரை, வேலந்தாவளம் முதல் வாளையார் வரை என்று 3 வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்துக்கு இடமாக சுற்றும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
எட்டிமடையில் அமைக்கப்படும் சோதனைச்சாவடி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். அத்துடன் வாகன சோதனையும் நடத்தப்பட உள்ளதாம். இந்த சோதனை சாவடி ஓரிரு நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாம்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications