கோவை சேஸிங்! காரின் மீது படுத்தபடியே 50 கி.மீ. பயணித்த காவலர்! 300 கிலோ குட்கா கடத்தல் கும்பல் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது காரில் இருந்து தப்ப முயன்ற கடத்தல்காரர்களை கார் மீது படுத்துக் கொண்டே 50 கி.மீ. தூரம் சென்று விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விளாங்குறிச்சியில் கோவில்பாளையம் துணை ஆய்வாளர் விக்னேஷ், தலைமை காவலர் வேல்முருகன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Coimbatore Vilankurichi police

அப்போது அவ்வழியாக கர்நாடகா பதிவெண்ணை கொண்ட ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்ய முற்பட்ட போது காரில் இருந்தவர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது தலைமைக் காவலர் வேல்முருகன் காரின் மீது ஏறி படுத்துக் கொண்டே சுமார் 50 கி.மீ. தூரம் பயணம் செய்தார். அந்த காரை பாலோ செய்தபடியே சக காவலர்கள் விரட்டிச் சென்றனர். அப்போது அவர்கள் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் 50 கி.மீ. தூரத்தில் இருந்த அவிநாசியில் இந்த காரை போலீஸார் மடக்க பிடித்தனர். அந்த காரில் போலீஸார் நடத்திய சோதனையில் 300 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

ராஜஸ்தான் கும்பல்

அந்த காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். காரின் மேல் படுத்துக் கொண்டு தனது உயிரை பணயம் வைத்து குற்றவாளிகளை பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. கிட்டதட்ட சினிமா சேஸிங் காட்சிகள் போல் இருந்தது.

டெல்லி சம்பவம்

கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் போக்குவரத்து காவலர் நரேந்திர சிங் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அப்போது வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தினார். ஆனால் காரை நிறுத்தாமல் தப்ப முயன்ற போது நரேந்திர சிங் சட்டென காரின் போனட் மீது ஏறினார். அப்போதும் அந்த கார் 2 கி.மீ. தூரத்திற்கு அதிவேகமாக சென்றது. பின்னர் அந்த கார் மடக்கி பிடிக்கப்பட்டது.

உ.பி.யில் நடந்த சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 2023 ஆம் ஆண்டு காரில் தப்ப முயன்ற குற்றவாளியை பிடிக்க போலீஸ் அல்லாத நபர் பேனட்டில் அமர்ந்து கொண்டார். 3 கி.மீ. தூரம் அதிவேக பயணத்தில் தொங்கியபடி பயணம் செய்தார். அப்போது சிக்னலில் பிற வாகனங்கள் காரை வழிமறித்ததை அடுத்து பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டு குற்றவாளியை போலீஸிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூர் சம்பவம்

பெங்களூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு போக்குவரத்து விதியை மீறிய ஒரு காரை டிராபிக் போலீஸ் நிறுத்த முயன்றார். ஆனால் காரை நிறுத்தாததால் காரின பேனட்டில் காவலர் உட்கார்ந்து கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து பொதுமக்களும் பிற போலீஸாரும் சேர்ந்து அந்த காரை சூழ்ந்து கொண்டு பிடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+