பொள்ளாச்சிக்கு வந்த மலபார் அணில்.. தினமும் இளநீர் வெட்டி தரும் தம்பதி.. பாசக்கார பய.. நெகிழும் கோவை
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி இளநீர் கடையை பற்றின செய்தி ஒன்று இணையத்தில் நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது... தம்பதி இருவரின் மனிதநேய செயலுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது... பொள்ளாச்சி ரோட்டில் என்ன நடந்தது தெரியுமா?
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் முக்கிய சாகுபடி பயிராக தென்னை உள்ளது. தேங்காய் மற்றும் இளநீர் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் இளநீர் தண்ணீர் அதிகமாவும், சுவையாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு எப்போதுமே உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி இளநீர் காய்கள்
அந்தவகையில், பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் இளநீர் காய்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பொள்ளாச்சி தம்பதியினர் செய்து வரும் காரியம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலருக்கும் வியப்பை தந்து வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அறிவு திருக்கோயில் அருகே அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர், தினமும் இளநீர் வெட்டி வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களாக, வனப்பகுதியில் இருந்து மலபார் அணில் ஒன்று அவர்களது கடைக்கு வந்துள்ளது.
மலபார் அணில் - தேங்காய்
முதலில் அணில் வருவதை பெரிதாக இந்த தம்பதியினர் எடுத்து கொள்ளவில்லை.. எனினும் கடைக்கு அணில் வந்துவிட்டதால் அந்த அணிலுக்கு ஒரு இளநீர் கொடுத்தனர்,, அந்த அணில் இளநீரை ருசித்து சாப்பிட்டது. அதன்பின்னர், அந்த அணில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் காட்டில் இருந்து இளநீர் கடைக்கு வந்துவிடுமாம்..
வழியில் உள்ள பலவிதமான மரங்களை தாண்டி, தம்பதியின் கடைக்கு வந்துவிடுகிறது.. அங்கு காய்ந்த இளநீரில் உள்ள தேங்காயை மட்டும் எடுத்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் காட்டுக்கே திரும்பி சென்றுவிடுகிறதாம்,.. இதற்காகவே இவர்கள் தினந்தோறும் இளநீர் ஒன்றை தனியாக வெட்டி வைத்து விடுவார்கள்..
இளநீர் கடை தம்பதியினர்
மலபார் அணிலும் காலை மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மரத்திற்கு மரம் தாவி வந்து இளநீரில் உள்ள தேங்காயை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மற்றும் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அணிலின் இந்த வாடிக்கையான பழக்கம் நெகிழ்ச்சியை தந்துவருகிறது. கஸ்டமர்கள் அந்த கடைக்கு வந்ததுமே மலபார் அணிலைதான் முதலில் தேடுகிறார்களாம்.. சிலர் இதை செல்போனில் வீடியோ எடுத்து செல்கிறார்கள்,..
மங்காத மனித நேயம்
அப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில் அணில் ஒன்று மரத்தில் ஏறி உட்கார்ந்துள்ளது.. அணில் வந்ததுமே, அம்பிகா ஜெகநாதன் தம்பதியினர், ஒரு இளநீரை வெட்டி அதில் இருந்து தேங்காயை உரித்து எடுக்கிறார்கள். பிறகு மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்த அணிலுக்கு தேங்காயை நீட்டுகிறார்கள்..
தேங்காயை பார்த்ததுமே அந்த அணிலும், விறுவிறுவென சற்று கீழே இறங்கி வந்து, மரத்தில் வௌவால் போலதொங்கி கொண்டே தேங்காயை வாங்கி கொண்டு, சாப்பிட துவங்குகிறது..
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அம்பிகா ஜெகநாதன் தம்பதிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள்... மனித நேயம் இன்னும் சாகவில்லை, அது இவர்களை போன்றோரின் ரூபத்தில் நீடித்து கொண்டிருப்பதாக நெகிழ்ந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்,
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications