வாடகை கொட்டகையில் தங்கிய ரம்யா.. கூடவே 4 நாய்கள்? ஹவுஸ் ஓனருக்கு வந்த சந்தேகம்.. ஆடிப்போன கோவை
கோவை: கோவையில் அங்கீகாரம் பெறப்படாத மசாஜ் சென்டர்கள், முறையாக லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக வரும் ரகசிய புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. சம்பந்தப்பட்ட இடங்கள், விபச்சாரம் நடப்பது உறுதியானால் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்நிலையில், இளம்பெண் ஒருவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட வீட்டின் உரிமையாளர், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இன்று கைது நடவடிக்கை வரை சென்றுவிட்டது. என்ன நடந்தது?
சில தினங்களுக்கு முன்பு, கோவையில் உள்ள சில ஸ்பாக்களிலும், லாட்ஜ்களிலும் விபச்சாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் மாநகர் முழுவதும் சோதனை நடத்தி வந்தனர். இறுதியில், காட்டூர், பீளமேடு, சிங்காநல்லுார் ஆகிய பகுதிகளிலுள்ள ஸ்பா மற்றும் குடியிருப்பில், பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பியூட்டி பார்லர் & ஸ்பா
அந்தவகையில், ராம் நகர், பகுதியில் உள்ள லெமன் பார்க் ஓட்டலிலுள்ள 79 சலூன் நெயில் ஆர்ட் பியூட்டி ஸ்பாவில், போலீசார் சோதனை செய்தபோது, வெளி மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள், கோவை பூமார்க்கெட்டை சேர்ந்த பிரமோத் குமார் ஆகியோர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிர் மனோவா, மணி பிரபு ஆகியோருக்கும் வலைவீசப்பட்டது.. அதேபோல, சிங்காநல்லுார் போலீசார் சோதனை செய்ததில், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் செய்து வந்த, 3 பெண்களை கைது செய்தனர்.
சுற்றி வளைத்து கைது
அதேபோல, பீளமேடு போலீசார், அவிநாசி சாலையில் உள்ள துலிப் ஸ்பா'வில் சோதனை செய்தபோது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 86000 பணம், செல்போன், கார்டு ஸ்வைப் மெஷின் போன்றவை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் ஸ்பா உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே இளம்பெண் ஒருவரின் நடத்தை மீது சந்தேகம் எழுந்து, அது மிகப்பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.. பீடம்பள்ளி கள்ளிதோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரனுக்கு 45 வயதாகிறது.. இவர் விவசாயம் செய்து வருகிறார்.. இவருக்கு 2 முறை திருமணமாகிவிட்டது.. ஆனால் இப்போது ராஜேந்திரன் தனியாக வசித்து வருகிறார்.
பால் வியாபாரம்
தன்னுடைய நண்பர் பீடம்பள்ளி அயோத்தியாபுரத்தை சேர்ந்த செந்தில் (55) என்பவருடன் சேர்ந்து ராஜேந்திரன் பால் வியாபாரம் செய்து வருகிறார்.. செந்தில் சொன்னதன் பேரில் தன்னுடைய மாட்டுக் கொட்டகையை பாப்பம்பட்டியை சேர்ந்த ரம்யா என்பவருக்கு நாய்கள் வளர்க்க வாடகைக்கு தந்துள்ளார்.. ரம்யாவுக்கு 30 வயதாகிறது..
அந்தவகையில், ராஜேந்திரனின் மாட்டு கொட்டகையில் கடந்த 45 நாட்களாக தங்கி , 4 நாய்களை ரம்யா வளர்த்து வந்துள்ளார்.. ஆனால் ரம்யாவை பார்ப்பதற்காக, அடிக்கடி ஆட்டோவில் சிலர் வந்துபோனதாக தெரிகிறது.. இதனால், ரம்யாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜேந்திரன், மாட்டு கொட்டகையை உடனே காலி செய்யுமாறு சொல்லி இருக்கிறார்.. அத்துடன், இதுதொடர்பாக சூலூர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்திருந்தார்.
ராஜேந்திரன்
இந்நிலையில், நேற்று முன்தினமும் இரவு 10.30 மணிக்கு, ரம்யாவை பார்க்க சிலர் வந்துள்ளனர்.. அவர்களை பார்த்ததுமே ராஜேந்திரனுக்கு ஆத்திரம் வந்துள்ளது.. இதனால் ரம்யாவுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துவிட்டது..
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் ரம்யாவை சரமாரியாக வெட்டிவிட்டார்.. இதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.. இதையடுத்து, அரிவாளுடன் சூலூர் போலீஸில் ராஜேந்திரன் சரணடைந்தார். போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications