கோவை மக்களுக்கு செம நியூஸ்! சத்தியமங்கலம் வரை வருது புதிய 4 வழிச்சாலை! சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்
கோவை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் இருந்து சத்தியமங்கலம் வரையில் புதிதாக 4 வழிச்சாலை அமைக்கக் கடந்த அதிமுக ஆட்சியிலேயே திட்டமிடப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே சுமார் 5 ஆண்டுகள் கழித்து அத்திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு முதலீடுகள் பெறப்படுகின்றன.

உள்கட்டமைப்பு: மற்றொரு பக்கம் தொழில்துறையினருக்குத் தேவையான உள்கட்டமைப்பு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பல முக்கியமான சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து சரக்குகளை வேகமாகவும் குறைந்த செலவிலும் மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அப்படி தான் கோவை சத்தி வரையிலான நான்கு வழிச் சாலைத் திட்டமிடப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரமாகக் கோவை இருக்கிறது. ஐடி துறை மட்டுமின்றி தொழில்துறையினருக்கும் முக்கியமான ஒரு இடமாகக் கோவை இருக்கிறது. இதனால் கோவையில் இருந்து பிற இடங்களுக்குச் சரக்குகளை எளிதாகக் கொண்டு செல்ல சாலை திட்டங்கள் தேவைப்படுகிறது. இதற்காகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
4 வழிச்சாலை: அதன்படி கோவையில் இருந்து சத்தியமங்கலத்தை, குறிப்பாகத் தமிழ்நாடு- கர்நாடக எல்லை வரையிலான பகுதியை இணைக்கும் வகையில் க்ரீன் ஃபீல்ட் 4 வழிச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே இப்போது மீண்டும் அந்த திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரிவை மாநில அரசு அமைக்க வேண்டியிருந்ததால், திட்டம் தொடங்கப்படவில்லை. இந்தச் சூழலில் நிலம் கையகப்படுத்தும் பிரிவு அமைக்கத் தமிழக அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் அதற்கான அதிகாரிகளை நியமிப்பார். ஒரு மாதத்தில் இந்த பணிகள் எல்லாம் நிறைவடையும். அதன் பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும்" என்றார்.
திட்டம் என்ன: கோவையில் இருந்து சத்தியமங்கலம் வரையிலான 96 கி.மீ.க்கு புதிய சாலை அமைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கோவையில் இருந்து சத்தியமங்கலம் மலை அடிவாரம் வரை இது நான்கு வழிச்சாலையாக இருக்கும். அங்கிருந்து கக்கனல்லா எல்லை வரை இரண்டு வழிச்சாலையாகவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சுமார் 4,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த நிலத்தைக் கையகப்படுத்த மத்திய அரசு ₹640 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் போது சாலை திட்டத்திற்கான மதிப்பீடு தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.
அடுத்து என்ன நடக்கும்: அதிகாரிகள் மேலும் கூறுகையில், "இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது.. அப்போதே நிலம் கையகப்படுத்துதல் குறித்த அறிவிப்பும் கூட வெளியிடப்பட்டது. இருப்பினும் அந்த நேரத்தில் இந்த சாலை திட்டம் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டது.
அதன் பிறகே திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்போது நிலம் கையகப்படுத்துவது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பும் காலாவதியானது. இதன் காரணமாகவே இப்போது மீண்டும் அனைத்து செயல்முறைகளையும் தொடங்க வேண்டி இருக்கிறது" என்றார்.
விவசாயிகள் எதிர்ப்பு: அதேநேரம் கோவை அடுத்துள்ள அன்னூர் பகுதி விவசாயிகள், இத்திட்டத்திற்காக தங்களது நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவை- சத்தியமங்கலம் இடையே இருக்கும் சாலையை அகலப்படுத்தலாம் என்றும் புதிய சாலை தேவையில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications