கோயம்புத்தூரின் அடையாளமே மாறியது.. செம்மொழி பூங்காவை திறந்து வைத்த ஸ்டாலின்.. கலைஞர் கனவு நனவானது
கோவை: கள ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 25, 26ம் தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்... இதில், கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இது கோவை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக இன்றும், நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு
கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார்.. செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு கோவையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.
அந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலையில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இன்று மாலை தொழில்துறை சார்பில் நடத்தப்படும், மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன.
செம்மொழி பூங்கா திறப்பானது கோவை மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.. காரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்வைத்த திட்டம் இதுவாகும்..
கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா
ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது... எனினும், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி வந்த பிறகு செம்மொழிப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக கோவையில் செம்மொழிப் பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதில் 45 ஏக்கர் பரப்பில் முதல் கட்ட பணிகளும் துரிதமாக நடந்தது.. இந்த திட்டத்திற்கு 167.25 கோடி நிதி மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன..
பூங்காவில் ஏகப்பட்ட வசதிகள்
இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் பூங்காவின் கட்டுமான திட்டங்கள் பெரிதும் விரிவடைந்து பணிகள் ஆரம்பமானது.. 2023ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து உள்ளன.
செம்மொழிப் பூங்காவில் மொத்தமுள்ள 45 ஏக்கர் பரப்பளவில் 7 ஏக்கர் மாநாட்டு மையம் போக, மீதமுள்ள பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது..
கலைநிகழ்ச்சிகள்
இந்த பூங்காவை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். காலை 11.45 மணிக்கு காந்திபுரத்தில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.. தொடர்ந்து செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர்தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிடுகிறார். பிறகு அங்குள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டுரசித்தார்.
பின்னர் செம்மொழி பூங்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என முக்கிய பிரமுகர்கள் 150 பேருடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். இதனை முடித்துவிட்டு அவர், கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்
கோவை வருகை
இதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கு தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்வரின் இன்றைய கோவை வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கருணாநிதி கனவு நனவாகிறது
பூங்காவின் மையப்பகுதியில் கட்டப்பட்டுள்ள நவீன மாநாட்டு மையம் 1,000 பேர் வரை உட்காரக்கூடிய வசதியில் உள்ளது.. அரசின் முக்கிய நிகழ்ச்சிகள், கலாசார விழாக்கள், கல்வி கருத்தரங்குகள் போன்றவை நடத்தப்படும் விதமாகவும், இங்க தனிப்பட்ட அறைகள், விருந்தினர் வசதிகள், உணவகம் மற்றும் பல்துறை பயன்பாட்டுக்கான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்காக விசாலமான நடைபாதைகள், புல்வெளிகள், ஓய்வு பகுதிகள் மற்றும் சிறுவர் விளையாட்டு அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மிகச்சிறந்த பொழுது போக்குத்தளமாக இந்த பூங்கா திகழும்.. மக்கள் நலனும், கலாச்சார வளர்ச்சியும் இணைந்த முழுமையான வெளிப்புற சுற்றுலாத் தலமாக இந்த பூங்கா உருவாகி உள்ளது.. சுற்றுலாவில் புதிய அத்தியாயத்தை இந்த பூங்கா ஏற்படுத்தி, கோவையின் புதிய அடையாளமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கலைஞர் கருணாநிதியின் கனவும் நனவாகிறது.
பூங்காவின் சிறப்புகள்
நுழைவுச்சீட்டு வழங்குமிடம், அனுபவ மைய கட்டடம். 500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், பணியாளர் அறை. உணவகம். ஒப்பனை அறை. சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளன. .
செம்மொழி வனம், மூலிகை வனம், மகரந்த தோட்டம், பாலைவனத்தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம் என, 23 விதமான தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு 2 கிமீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
கடையேழு வள்ளல்கள் சிலை
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் போன்றவை உள்ளன. மரங்கள், செடிகளுடன், 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் நடப்பட்டுள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
மரங்கள் மற்றும் தாவரங்களை பற்றி அறியும் வகையில், க்யூஆர் கோடு, பார் கோடு வசதியுடன் கூடிய பெயர் பலகை வைக்கப்படும். க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்தால், அதன் சிறப்பை ஒலி வடிவில் கேட்கலாம்.
அருங்காட்சியகம், படிப்பகம், சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் உள்ளன. உலகத் தர உடற்பயிற்சி கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகளுக்கு 14,000 சதுர அடி விளையாட்டு திடல், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு திடல் போனற் வசதிகளும் உண்டு.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications