மச்சினிச்சி கோவை வந்த நேரம்.. ஒரே நாளில் தங்கையையும் காணோம், கணவரையும் காணோம்.. பெண்ணுக்கு அதிர்ச்சி
கோவை: கோவை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு முன்புதான் பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.. ஆனால் அதற்குள் மணமகளை காணவில்லை. இதனால் பதறிப்போன மாப்பிள்ளை எங்கெங்கோ மனைவியை தேடி அலைந்துள்ளார். பிறகு போலீசுக்கு சென்றுள்ளார்.. போலீசாரின் உதவியுடன் மனைவியை தேடி கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் மாப்பிள்ளைக்கே அங்கு ட்விஸ்ட் காத்திருந்தது.
கள்ளக்காதல் கொடூரங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெருகி கொண்டே வருகின்றன. உலகமறிய பச்சிளம் குழந்தைகளையும் கள்ளக்காதல்கள் எளிதாக காவு வாங்கி விடுகின்றன. இதுபோன்ற உறவு சிக்கல்கள், தகாத உறவுகளினால், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன.. அப்படித்தான் கோவை மாவட்டத்தில் 7 மாத கர்ப்பிணி கலங்கி போய் உள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது கணியூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் 40 வயது ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 40 வயதை எட்டிய நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு தடபுடலாக திருமணம் நடந்தது.. இப்போது இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
மனைவியின் தங்கை
இந்நிலையில், ராமுவின் மனைவியின் தங்கைக்கு 32 வயதாகிறது.. அவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.. எனவே தன்னுடைய தங்கைக்கு எங்கெங்கோ அலைந்து தேடி, மாப்பிள்ளை பார்த்தார் ராமுவின் மனைவி.
இறுதியில், தங்கைக்கேற்ற மாப்பிள்ளை ஒருவரை பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருமணத்தை அக்கா செய்து வைத்தார்.
சூலூர் போலீஸ் ஸ்டேஷன்
ஆனால், திருமணமாகி 4வது நாளில் கல்யாண பெண்ணை காணவில்லை.. இதனால் பதறிப்போன அக்கா, தன்னுடைய தங்கையை எங்கெங்கோ தேடினார்.. அதேபோல மணமகனும் மனைவியை தேடி அலைந்தார்.. எங்குமே அந்த பெண் கிடைக்கவில்லை என்பதால், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்கள்.
இந்த நேரம் பார்த்து, அக்காவின் கணவர் அதாவது ராமுவை காணவில்லை.. இருவரையுமே ஒரே நேரத்தில் காணவில்லை என்பதால், ஒருவேளை இருவரும் எங்காவது சென்றிருப்பார்களோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்..
அக்கா கணவர்
பிறகு 2 பேரின் செல்போன் டவர்களையும் ஆய்வு செய்தபோது, இருவருமே ஒரே இடத்தில் இருப்பது உறுதியானது... இதனையடுத்து போன் சிக்னலை வைத்து, 2 பேரையும் சுற்றிவளைத்து போலீசார் பிடித்துவிட்டனர்.. அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்..
அப்போதுதான், புதுப்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பேயே, தன்னடைய அக்கா கணவர் ராமுவுடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.. 2 பேரும் தங்களது உறவை வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார்கள்.. ஆனால், ராமுவின் மனைவிக்கு இது தெரிந்துவிட்டது.
மச்சினிச்சி விருப்பம்
தன்னுடைய தங்கையுடன் கணவர் தவறாக பழகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.. இந்த விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவசர அவசரமாக தங்கைக்கு மாப்பிள்ளையும் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்... ஆனாலும் புது மாப்பிள்ளையுடன் சரியாக பேசாமல் இருந்துள்ளார் தங்கை..
எந்நேரமும் அக்கா கணவரின் நினைவாக ஏங்கி தவித்துள்ளார்.. ஒருகட்டத்தில் ராமுவுக்கு போன் செய்து, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.. உங்களுடனேயே வந்துவிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. இதற்கு சம்மதம் சொன்ன ராமுவும், மச்சினிச்சியை அழைத்து சென்றது போலீசாரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications