கதற கதற காரில் கடத்தப்பட்ட இளம்பெண்.. பரவும் பகீர் சிசிடிவி காட்சி - கமிஷனர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி காரில் கடத்திச் சென்றதாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரில் பார்த்தவர்கள் சிங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், இருகூரை அடுத்த ஏஜி புதூர் அருகே தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை தாக்கி காரில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

commissioner-explains-cctv-footage-showing-young-woman-kidnapped-in-car-in-coimbatore

அப்பகுதியில், கார் ஒரு சில நிமிடங்கள் நின்றதாகவும், அப்போது காருக்குள் இருந்த பெண் அலறிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காரின் அருகில் செல்ல முற்பட்டபோது கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

காரில் இருந்த மூன்று பேர் பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இளம்பெண்ணை கடத்திச் சென்ற கார் ஹூண்டாய் i20 கார் என்பதும், ஏஜி புதூர் பகுதியில் இருந்து இருகூர் நோக்கி கார் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வெள்ளை நிற காரில் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அங்கிருந்து கிளம்பியது போல காட்சிகள் இருந்தன. பெண்ணின் அலறல் சப்தமும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்பப் பிரச்சினை காரணமாக வலுக்கட்டாயமாக உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், இருகூர் அருகே வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் அலறல் சப்தத்துடன் சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல் துறையினருக்கு 100க்கு அழைத்து தகவல் அளித்துள்ளார்.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள். அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம். சூலூரில் இருந்து வந்த ஒரு வாகனம் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது, ஒரு காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது.

பெண் காணவில்லை என்பதுபோல இதுவரை புகார் எதுவும் வரவில்லை. வாகனத்தின் பதிவு எண் எந்த ஒரு இடத்திலும் தெளிவாக புலப்படவில்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+