கோவையை கதிகலங்கச் செய்த உ.பி. கொள்ளையர்கள்.. திட்டம் தீட்டிக் கொடுத்த 2 பேர் கைது
கோவை: கோவை மாநகர் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்திருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 1,848 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பில் ஏ பிளாக்கில் 3 வீடுகள், சிா பிளாக்கில் 10 வீடுகள் என 13 வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் 42 சவரன் நகை மற்றும் 1.5 இலட்சம் ரூபாய் பணம், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

சிசிடிவி ஆய்வு
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கவுண்டம்பாளையம் போலீஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் ஆட்டோ மூலம் வந்து கொள்ளை அடித்து விட்டு அதே ஆட்டோவில் திரும்பச் சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஃப் 48, இர்ஃபான் 45, கல்லூ ஆரிஃப் 60 ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் துறையினரை தாக்கிவிட்டு அம்மூவரும் தப்ப முயன்றதையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
மேலும் இருவர் கைது
இதில், காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிஃப் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கொள்ளையர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் அயூப்கானை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த தாவூத் (18) , பர்மான் (23) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே, கொள்ளையர்கள் அரசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications