பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இப்பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கனிம வள அதிகாரிகள் மற்றும் அதன் பகுதியில் உள்ள காவல்துறையினர்களுக்கு குவாரி உரிமையாளர்கள் கணிசமாக மாதம் மாதம் கவனித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது தொடர்பாக பேசிய விவசாயிகள் பலகட்ட போராட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.. குறிப்பிட்ட அளவு மட்டுமே வெட்டி எடுக்க அனுமதி உண்டு. ஆனால் குவாரியில் வெளிபொருட்கள் நிரப்பி வெடிக்க செய்து டாரஸ் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். சூலக்கல் கிராமம் சென்னையூர் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் விவசாய பூமிகள் உள்ளன. இதில் தென்னை வாழை எலுமிச்சம்பழம் காய்கறிகள் பயிர் வகைகள் செய்து விவசாயம் செய்துவருகிறோம்

இப்பகுதிகளில் பனைமரம் அதிக அளவில் உள்ளது. தமிழக அரசு பனை மரம் வெட்ட அனுமதி இல்லை, ஆனால் எங்கள் கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்பட்டு வந்த கல்குவாரியை நிறுத்தி வைத்தோம். எங்கள் பகுதியில் ஒரு விவசாயி தனது இடத்தில் கல்குவாரி அனுமதி பெற்று தற்போது நடத்தி வருகிறார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது என்று விவசாயிகள் குமுறுகிறார்கள்.

குவாரியில் தேங்கும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள ஓடையில் அனுமதி இல்லாமல் புறப்படுகிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் என அதிகாரிகளுக்கு மனு அளிக்கும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.
கடந்த ஆட்சியில் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததின் பேரில் தற்காலிகமாக குவாரியில் கல் எடுக்காமல் இருந்து வந்தனர். ஆட்சி மாற்றம் வந்தவுடன் மீண்டும் தனது இடத்தில் அந்த விவசாயி பழைய டயர் வைத்து மேலே தார்ப்பாய் அனைத்தும் வெடிக்கும் சத்தம் வராமல் இருக்க தோட்டத்தை சுற்றி பைப்லைன் அமைத்து தண்ணீர் மூலம் புகை வராமல் தடுத்து வருகிறார்.

கல்குவாரி லாரிகள் அதிக அளவில் வந்து செல்வதால் சாலைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளது . ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் உள்ளது தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி கல்குவாரி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . கனிமவள துறை அமைச்சர் நேரடியாக விவசாய நிலங்களுக்கு சென்று கல்குவாரிகள் ஆய்வு செய்யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துராஜ் அருள் பிரகாஷ் ஆகிய விவசாயிகள் கூறினார்கள்,












Click it and Unblock the Notifications