கோயம்புத்தூர் சுகன்யா.. கோடி கோடியாய் "சிதறிய" ஜிஎஸ்டி பணம்.. கோவையை அதிரடி விட்ட நொய்டா ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையை சேர்ந்த பெண்ணை உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.. என்ன காரணம்? யாரிந்த பெண் சுகன்யா?

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா பிரபு.. 40 வயதாகிறது. இவர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் இயந்திரங்கள் தொடா்பான நிறுவனம் நடத்தி வந்தாா்..

Coimbatore Kovai

நொய்டா: இதனிடையே, நொய்டாவில் சுமாா் 1,000 போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன்மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஜிஎஸ்டி இழப்பீடு ஏற்பட்டதாக மாநில குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே, கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இதுகுறித்த வழக்கினை பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதாவது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக "இ-வே" பில் தயாரித்தும், உள்ளீட்டு வரிச் சலுகை(ஐடிசி) பெற்றும் மோசடி நடந்துள்ளது.

விசாரணை: இதையடுத்து டெல்லி, நொய்டா, காஜியாபாத், சிா்ஸா, ஜெய்பூா் போன்ற பகுதிகளை சோ்ந்த 45 போ் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போதுதான் கோவை சுகன்யாவின் பெயரும் அடிபட்டது.

கோவையைச் சோ்ந்த சுகன்யா பிரபு நடத்தி வரும் நிறுவனத்திலும் ரூ.14.5 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது... ஆனால் அதற்குள் சுகன்யா தலைமறைவாகிவிட்டாா். இதனால் அவா் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.. சுகன்யா எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாத நிலையில், உத்தரப்பிரதேச மாநில காவல் துறை கடந்த ஜூன் 1ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அறிவிப்பு: அந்த அறிவிப்பில், சுகன்யா பிரபு குறித்த தகவல்கள் அல்லது அவரை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, சுகன்யா கோவையில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக வந்த உத்தரப்பிரதேச போலீஸாா் கோவைக்கு விரைந்து வந்தனர்.. ரேஸ்கோா்ஸ் போலீஸாரின் ஒத்துழைப்புடன் சுகன்யா பிரபுவை கைது செய்து நொய்டா அழைத்து சென்றுள்ளனர்.

ரேஸ்கோர்ஸ்: இதுகுறித்து கோவை மாநகர போலீசார் சொல்லும்போது, "கடந்த, 22ம் தேதி நொய்டா போலீசார் 4 பேர் கோவை வந்திருந்தனர்.. ரேஸ்கோர்ஸில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த சுகன்யாவை கைது செய்து, நொய்டா கொண்டு சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடிவருகின்றனர்" என்றனர்.

சுகன்யா கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்திருக்கிறார்.. போலி நிறுவனங்களின் பெயரில், ஐ.டி.சி., பெற்று கடந்த வருடம் மட்டும் ரூ.14.2 கோடி அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பெண் தொழிலதிபர் இத்தனை கோடி மோசடியில் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை தந்துவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+