கோயம்புத்தூரில் சர்ருன்னு எகிறிய டீ, காபி விலை.. டிரம்ப் போட்ட வரி.. கோவையில் எடுத்த சூப்பரான முடிவு
கோவை: மக்களின் விருப்பமான பானங்களில் முதன்மையானதாக, டீ, காபி திகழ்ந்து வருகிறது.. கூட்டம் இல்லாத டீக்கடைகளை பார்க்கவே முடிவதில்லை.. அந்த அளவுக்கு பொதுமக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது டீ, காபி.. ஆனால், டீ, காபி பிரியர்களக்கு அதிர்ச்சி தரத்தக்க அளவில், அவைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது, அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
கோவையில், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் விலைவாசிகள் உயர்ந்தபடியே உள்ளது.. காய்கறி விலை முதல் தங்கம் விலை வரை எங்கு பார்த்தாலும் விலையேற்றம்தான் காணப்படுகிறது..
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
இதுபோக சமையல் சிலிண்டர், பெட்ரோல் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் டீ , காபி விலையும் கடந்த வாரம் உயர்த்தப்பட்டுள்ளது.
பால் விலை, டீ/ காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்திருந்தது..
அதன்படி, ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15லிருந்து இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. சென்னையில் டீ கடைகளில் புதிய விலைப்பட்டியலும் ஒட்டப்பட்டது.. 3 வருடங்களுக்கு பிறகு சென்னையில் டீ, காபி தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பேக்கரி
இப்போது சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. அதன்படி, டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சென்னையுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் டீ மற்றும் காபி உள்ளிட்டவற்றின் விலை சற்று அதிகம் என்கிறார்கள்..
இப்படி சென்னை, கோவை என பிரதான மாவட்டங்களில் இந்த விலை உயர்வானது, டீ, காபி பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை டீ, காபி விலை
டீ ரூ.15க்கும், காபி ரூ.20க்கும் விற்கப்பட்ட நிலையில், 5 ரூபாய் உயர்த்துவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. டீ ரூ.20, பிளாக் டீ ரூ.15, பார்சல் டீ ரூ. 40, காபி ரூ. 25, பிளாக் காபி ரூ. 20, பார்சல் காபி ரூ.55, லெமன் டீ ரூ. 20, கிரீன் டீ ரூ. 20, ஹார்லிக்ஸ் ரூ.30, பூஸ்ட் ரூ. 30 என தலா 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சில பேக்கரிகளில் ஸ்நாக்ஸ் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.. ரூ.15 இருந்த சின்ன ஸைஸ் ஜாம் பன் 20 ரூபாய், தேங்காய் பன் 20லிருந்து 25, கிரீம் பன் பெரியது 50லிருந்து 55, வெஜ் பப்ஸ் 20லிருந்து 22, எக் பப்ஸ் 22லிருந்து 25, மஸ்ரூம் மற்றும் பன்னீர் 25லிருந்து 30 என, 2 முதல் 5 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டிரம்ப் வரி விதிப்பு
பேக்கரி உரிமையாளர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் பொன்னுசாமி இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்..
அதில், ''4 வருடங்களாக டீ, காபி விலை உயர்த்தப்படவில்லை. வாடகை, கரண்ட் பில் என செலவுகள் அதிகரித்துள்ளதால், சங்க உறுப்பினர்களிடம் ஆலோசித்து, டீ விலை உயர்த்தியுள்ளோம், '' என்றார்.
ஆனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத பேக்கரி மற்றும் டீக்கடைகளில், விலை உயர்வு அமலுக்கு வரவில்லையாம்.. அவைகளில் தற்போது 15 ரூபாய்க்கு டீ, 20 ரூபாய்க்கு காபி விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமெரிக்காவின் அநியாய வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹோட்டல்களில் அமெரிக்க குளிர்பானங்கள் விற்கப்படாது என்று தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications