மூக்கு புடைப்பாக இருந்தால்... கோவை ரத்னபுரி மேம்பாலத்தில் இருந்த ஏணி.. உடம்பெல்லாம் மூளை
கோவை: திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அகில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை கடந்து சென்று கொண்டு இருந்தது. அந்த ரயில் ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்றபோது தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தால் ஆன ஏணி வைக்கப்பட்டு இருந்தது. உடனேஎன்ஜின் டிரைவர் ரயிலை நிறத்த முயன்றார். ஆனால் முடியவில்லை.. இதுபற்றி தகவல் கொடுத்தார். விசாரித்த போலீசாருக்க தலைசுற்ற வைக்கும் காரணம் தெரியவந்தது.
திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு அகில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் கோவையை கடந்து சென்று கொண்டு இருந்தது. கோவை ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் ரயில் சென்றது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தால் ஆன ஏணி வைக்கப்பட்டிருந்து. இதை பார்த்து ரயிலை ஓட்டி வந்த என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே ரயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் ஏணி மீது ரயில் ஏறியது. இதில் ஏணி துண்டு, துண்டாக உடைந்து விழுந்தது. இதையெடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து என்ஜின் டிரைவர், கோவை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ஏணியை அகற்றினர். இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் வீரகேரளத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 35), சாஸ்திரி நகரை சேர்ந்த கந்தசாமி (45) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்த போது, தலைசுற்ற வைக்கும் உண்மை தெரியவந்தது. கைதான 2 பேரும் தண்டவாளத்தின் அருகே கிடக்கும் மதுபாட்டில்கள் மற்றும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.. அதுபோன்று ஒரு பழைய அலுமினிய ஏணியை இரும்பு கடைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்று உள்ளனர். அங்கிருந்தவர்கள் ஏணியை துண்டு, துண்டாக உடைத்து கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்கள்.
இதனால் அந்த ஏணியை உடைப்பதற்காக தண்டவாளத்தின் குறுக்கே வைத்து உள்ளனர். என்ஜின் டிரைவர் ஏணியை பார்த்ததும், மெதுவாக ரயிலை இயக்கியதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் ஏணி பல துண்டுகளாக உடைந்துள்ளது. இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications