கோவையும், சென்னையும் நாட்டின் பாதுகாப்பான நகரங்கள்! தைரியமா குரல் தரும் பெண்கள்: கீதாஜீவன் பெருமிதம்
கோவை: அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் செய்யும் குற்றச்சாட்டினை அமைச்சர் கீதா ஜீவன் மறுத்துள்ளார்.
கடந்த வாரம், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி செய்தியாளர்களிடம் பேசும்போது, 2022ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் 40 முதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மகளிர் ஆணையத்துக்கு வரும் புகார் மனுக்கள் அடிப்படையில் இதை சொல்கிறேன்.

விழிப்புணர்வு
பெண்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முன்பு எல்லாம் சமூகத்துக்கு பயந்து கொண்டு, வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால், இன்றைக்கு, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் புகார் மனுக்கள் அதிகரித்துள்ளன.
மகளிர் ஆணையம், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி, பாஜக,
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, தொடர்ந்து, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியபடியே உள்ளார்.
எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று சொல்கிறது.. திமுக ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த திராணியற்ற அரசாக திமுக உள்ளது தெளிவாகிறது. அரசு, காவல் துறை மீது பயம் இல்லாமல் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது என்றெல்லாம் சாடியிருந்தார்.
அதேபோல தமிழக பாஜகவும் திமுக அரசை விமர்சித்து வருகிறது.. பெருகிவரும் போதை கலாச்சாரத்தால் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிட்டது என்றும் பாஜகவும் கூறிவருகிறது.
நாகர்கோவிலில் கீதா ஜீவன்
இந்நிலையில், நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டினை மறுத்தார்.. அப்போது அவர் சொல்லும்போது,
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.. ஆனால் உண்மை அது கிடையாது.
கோவை, சென்னை பாதுகாப்பு நகரம்
இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவை தான் என்று மத்திய அரசின் புள்ளி
புள்ளி விபரமே சொல்கிறது.. பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் திமுக ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் எதையுமே பாராட்டமாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா? என்ற நோக்கில் இப்படியெல்லாம் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் சொல்லும் பழைய நிலைமை மாறி இருக்கிறது. பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும்தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள்.. ஆனால், பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும்.
அன்புக்கரங்கள் திட்டம்
சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். சமூக நலத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications