கோவையில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டரை உற்று பாருங்க.. இது அதுல்ல.. விஜய்க்கு கொடுத்த புது பட்டம்
கோவை: அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இந்த நிலையில் கோவையில் சட்டமேதையின் ஆசி, 2026 இல் சாணக்கியர் ஆட்சி என போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற அம்பேத்கர் குறித்தான நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இதற்காக அறிவிப்பு வந்தததில் இருந்து பல்வேறு கருத்துக்கள் அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் சட்ட மேதையின் ஆசி... 2026 சாணக்யர் ஆட்சி... என தவெக கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற நூலின் தலைப்பும் அம்பேத்கர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு அந்த நூலை வழங்குவது போன்றும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் கோவை மாநகரில் தண்டுமாரியம்மன் கோவில் அருகில், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த போஸ்டர் கலாச்சாரம் அவர் ரசிகர்களிடையே தலைதூக்கியது.
கடந்த 2023 ஆம் ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் கொண்டாட்டங்களை தொடங்கினர். அப்போது கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் லியோ வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி என குறிப்பிட்டு 234 என தமிழக சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர். அது போல் தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம்... ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது என்றும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதே 2023 ஆம் ஆண்டு விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது போல் நான் ரெடி என்பது போல் வரிகளும் இடம் பெற்றிருந்தன. "2026 தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலை நிமிர்த்திய தலைவனே!” “நாளைய தமிழகம் காத்திருக்கிறது அண்ணா!” போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று விஜய் கலந்து கொள்கிறார். அந்த புத்தகத்தை வெளியிட அதை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications