வேற மாதிரி.. வேற மாதிரி.. ஹைடெக்காக மாறும் கோவை உக்கடம் பேருந்து நிலையம்
கோவை: கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த உக்கடம் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன, எப்போது திறக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையை பெற்ற கோவை, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து தொழில்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. குறு சிறு தொழில் நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், ஐ.டி, தங்க நகை உற்பத்தி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை சத்தமே இல்லாமல் வளர்ச்சியடைந்து வருகிறது.

கோவை வளர்ச்சி
அது மட்டுமல்லாமல் இந்தியளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலிலும் கோவை இருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கோவையின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், ரயில் நிலையம் புனரமைத்தல், புதிய ரயில் முனையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன.
கோவை விமான நிலையத்தை கடந்த 6 மாதங்களில் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். கோவை ரயில் நிலையத்தை சராசரியாக வருடத்திற்கு 2 கோடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல பேருந்து போக்குவரத்தையும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். காந்திபுரம் நகர மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்கள், உக்கடம் பேருந்து நிலையம், சாய்பாபா கோவில் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவை கோவையில் இயங்கி வருகின்றன.
உக்கடம் பேருந்து நிலையம்
பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம், செம்மொழி பூங்கா, தங்க நகை பூங்கா, ஐ.டி பூங்கா, சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச ஹாக்கி மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன. வெள்ளலூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கின. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
மேலும் நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களை மேம்படுத்த அரசு முடிவு செய்தது. உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தால் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது உக்கடம் பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
வசதிகள்
இதன் காரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தை ரூ.21.50 கோடி மதிப்பில் மேம்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பேருந்து நிலையத்தில் கடைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை கட்டுமானங்களின் பணி நிறைவடைந்துள்ளது. அங்கு பேருந்துகளுக்கான நிழற்குடைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தற்போது உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் கேரளாவுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சராசரியாக தினசரி 80 பேருந்துகளை கையாளும் வகையில் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது. இதுதவிர பல நவீன வசதிகளும் செய்யப்படவுள்ளன.
எப்போது திறப்பு
அதன்படி அதி நவீன பயணிகள் காத்திருப்பு அறை இருக்கைகள், 3 கழிப்பறைகள், இலவச வைஃபை வசதி, செல்போன் சார்ஜிங் வசதி, தாய்பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன. மேலும் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே மலர் செடிகள் வைத்து பராமரிக்க திட்டமிட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடித்து, பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications