Coimbatore Voters List: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டில் எவ்வளவு பேர் நீக்கம்.. முழு விவரம்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியில் (எஸ்ஐஆர்) ஈடுபட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் முன்பு 32 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 6.50 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் சுமார் 97.40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிரந்தரமாக இடம் மாறி சென்ற பிரிவில் 52.60 லட்சம் வாக்காளர்கள், இரட்டை பதிவு பிரிவில் 3.98 லட்சம் வாக்காளர்கள், கண்டறிய முடியாதவர்கள் பிரிவில் 13.60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டார். இதில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 பேர் வாக்காளர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 12,43,282 ஆண்கள், 13,30,807 பெண்கள், 518 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.உயிரிழந்த இறந்த வாக்காளர் பிரிவில் 1,19,489 பேர், முகவரி இல்லாதவர்கள் பிரிவில் 1,08,360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் பிரிவில் 3,99,159 பேர், இரட்டை பதிவுகள் பிரிவில் 23,202 பேர், இதர காரணங்களுக்காக 380 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி தொகுதிவாரியாக, மேட்டுப்பாளையம் தொகுதியில் 1,28,591 ஆண் வாக்காளர்கள், 1,41,272 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினம் 35 என மொத்தம் 2,69,898 வாக்காளர்களும், சூலூர் தொகுதியில் 1,41,306 ஆண் வாக்காளர்கள், 1,52,112 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினம் 98 என மொத்தம் 2,93,516 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் 1,84,213 ஆண் வாக்காளர்கள், 1,93, 416 பெண் வாக்காளர்கள், 111 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,77, 740 பேர்
கோவை வடக்கு தொகுதியில் 1,37,248 ஆண் வாக்காளர்கள், 1, 41,257 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 26 பேர் என மொத்தம் 2,78,531 வாக்காளர்கள் உள்ளனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,32, 122 ஆண் வாக்காளர்கள், 1,40,712 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 112 என மொத்தம் 2,72,946 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 86,755 பேர், பெண் வாக்காளர்கள் 92,521, மூன்றாம் பாலினத்தவர் 32 பேர் என மொத்தம் 1,79,308 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,287 பேர், பெண் வாக்காளர்கள் 1,31,111, மூன்றாம் பாலினத்தவர் 24 பேர் என மொத்தம் 2,54,422 வாக்காளர்களும், கிணத்துக்கடவு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,36,660, பெண் வாக்காளர்கள் 1,46,930, மூன்றாம் பாலினத்தவர் 31 பேர் என
மொத்தம் 2,83,621 பேரும், பொள்ளாச்சி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 93,557 பேரும், பெண் வாக்காளர்கள் 1,02,784 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 34 பேர் என மொத்தம் 1,96,375 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 79,543 பேரும், பெண் வாக்காளர்கள் 88,692 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 16 பேரும் என மொத்தம் 1,68,251 பேர், மூன்றாம் பாலினத்தவர் 111 பேர் என மொத்தம் 3,77,740 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 5.63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் மொத்த வாக்காளர்கள் 24,44,929 பேர் உள்ளனர். எஸ்ஐஆர் பணிக்குப் பின்னர் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள 18,81,144 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு
ஈரோட்டில் 16.30 சதவீத வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, SIR கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்கள் 18,81,144 உள்ளனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் மூன்று தொகுதிகளில் கண்டறிய முடியாதவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு, இறப்பு என 56,091 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications