கோவையில் காய் வெட்டும் கத்தியில் கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது
கோவை: கோவையில் தாலியை அடமானம் வைத்ததில் ஏற்பட்ட தகராறில், காய் வெட்டும் கத்தியில் கணவனை குத்தி கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியில் வசிப்பவர் பிராங்க்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர் பீளமேடு பகுதியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
பிரிட்டோவுக்கு.ம கரோலின் என்ற பெண்ணுக்கும் (31) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரிட்டோ உயிரிழப்பு
இந்நிலையில் பிரிட்டோ கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் கத்திக் காயம் ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் பிரிட்டோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக மரணம் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கணவன் கழுத்தில் பாய்ந்தது
அப்போது கணவர் பிராங்க்ளின் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்நிலையில் சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் கழுத்தில் கத்தி பதிந்ததாகவும் காவல் துறையினர் விசாரணையில் கரோலின் கூறியுள்ளார்.

விசாரணையில் ஒப்புதல்
இதில் சந்தேகமடைந்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் தாலியை அடமானம் வைத்ததை எடுத்து தர கரோலின் கூறிய போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கரோலின் காய் வெட்டும் கத்தியால் பிரிட்டோவை குத்திவிட்டதாகவும் அதில் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

கரோலின் கைது
இதையடுத்து கரோலினை கைது செய்து வெரைட்டி ஹால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய் வெட்டும் கத்தியில் கணவனை மனைவியே கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications