கோவை மக்களுக்கு விடிவுகாலம்! தமிழக பட்ஜெட்டில் வர போகும் சூப்பர் அறிவிப்புகள்! மகிழ்ச்சியில் கொங்கு
கோவை: கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் என்பது தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் மாவட்டம் ஆகும். சென்னையை போல் இங்கும் ஐடி தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தொழில் தொடங்கவும் ஏற்ற இடம் இது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு கொஞ்சம் அருகே இருப்பதால் அந்த பகுதியின் வானிலை வித்தியாசமாக இருக்கும்.

அதாவது வெயில் என்பது அந்தளவுக்கு தெரியாது. கோடை வெயிலில் கூட வெயில் இருந்தாலும் புழுக்கம் தெரியாது. மாலைக்கு மேல் ஜில் ஜில் என காற்று வரும். அதிலும் புறநகர் பகுதிகளில் கேட்கவே தேவையில்லை.
சென்னைக்கு நோ: மேலும் கேரள எல்லையில் இருக்கும் பகுதிகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கும். எனவே இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் பரபரப்பான இடமான சென்னைக்கு வர மாட்டார்கள். அப்படிப்பட்ட கோவை மாவட்டத்தில் தொழில் நிமித்தமாக வட இந்தியர்கள், தென் தமிழகம், வட தமிழகத்தை சேர்ந்தவர்கள், தென்னிந்தியர்கள் என வசித்து வருகிறார்கள்.
குடிநீர்: எந்த ஊராக இருந்தாலும் அங்கு சாலை போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இருந்தால் மட்டுமே அவை வளர்ந்ததாக கருதப்படும். அந்த வகையில் இந்த முறை பட்ஜெட்டில் கோவைக்கு நிறைய அறிவிப்புகள் வர போகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் பவன்குமார் கூறியிருப்பதாவது: கோவையில் இயற்கையை பேணி பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
அதில் முக்கியமாக நீர் நிலைகள் எந்த காரணத்தை கொண்டும் மாசடைய விடக் கூடாது. மலைகள் சூழ்ந்திருப்பதால் குளங்கள் நிறைய உள்ளன. அவற்றை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். அதுவே நிலத்தடி நீர் உருவாவதற்கு அடிப்படையே நீராதாரங்கள்.
மகிழ்ச்சி பட்ஜெட்: குடிநீர், சுகாதாரம், சாலை போக்குவரத்து, மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவை தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கோவை மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவைகளில் காலதாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக விரைந்து தீர்வு காணப்படும். அது போல் போதை பொருள் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்படும்.
கனிமவளக் கொள்ளை: கோவை புறநகர் பகுதிகளில் கனிமவளங்கள் கொள்ளை போவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு விவாதித்து என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை மேற்கொள்வேன். கனிம வள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பவன்குமார் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications