பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை படமாக எடுப்பதாக கூறி.. கல்லூரி மாணவி பலாத்காரம்! அதிர்ந்துபோன கோவை
கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுப்பதாகக் கூறி, இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் சம்பவம் மாநிலத்தையே அதிரச் செய்தது. இளம் பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் மீது போலீசாரில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பகீர் தகவல்கள் கிளம்பின. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

பொள்ளாச்சி சம்பவம்
இந்தச் சூழலில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப் படமாக எடுப்பதாகக் கூறி, கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019இல் பார்த்திபன் என்ற நபர் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க உள்ளதாகவும் இதில் நடிக்க நடிகைகள் தேவை என்றும் கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரத்தை வெளியிட்டு உள்ளார்,

மயக்க மருந்து
இதை நம்பி ஏராளமான பெண்கள் ஆடிஷனுக்கு சென்று உள்ளனர். இந்த ஆடிஷனுக்கு கோவையில் இருக்கும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும் சென்றுள்ளார். அப்போது பார்த்திபன் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து, மாணவியை அழித்துள்ளார். அந்த மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருத்தைக் கொடுத்துள்ளார். அதைக் குடித்ததும் மாணவிக்குத் தலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டு உள்ளது.

பலாத்காரம்
மயக்கமடைந்த கல்லூரி மாணவியைப் பார்த்திபன் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பின்பு மாணவி பிரச்சனை செய்தபோது, "உனக்கு 17 வயது தான் ஆகிறது. மெஜர் ஆனதும் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை கல்லூரியில் படி! அப்போதே நடிக்கும் வாய்ப்பும் வாங்கி தருகிறேன். இதையெல்லாம் வெளியே சொன்னால் உனக்குத் தான் அசிங்கம்" என்று கூறி பார்த்திபன் அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.

கர்ப்பம்
அதன் பின்னர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை கல்லூரி மாணவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதனால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் அப்போது மாத்திரைகளைக் கொடுத்து கர்ப்பத்தைப் பார்த்திபன் கலைத்தார் என்றும் மாணவி புகார் தெரிவித்து உள்ளார். 18 வயதானதும் திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பெண்ணுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்ட பார்த்திபன், அவரை விட்டு விலகிச் செல்ல தொடங்கி உள்ளார்.

திடுக் தகவல்கள்
அதன் பின்னர் பார்த்திபன் குறித்து விசாரித்த போது தான், கல்லூரி மாணவிக்குப் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அந்த நபர் இதேபோல பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தன்னை பலாத்காரம் செய்த பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகார்கள்
தற்போது தலைமறைவாக உள்ள பார்த்திபனைப் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். இதேபோல கோவை வேடப்பட்டியை சேர்ந்த ஆசிரியை ஒருவரும், திருவாரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் பார்த்திபன் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளனர். இதுபோன்ற குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications