கோவையில் ஷாக்.. பாத்ரூமில் கேமரா பொருத்தி வீடியோ எடுத்த நபரை ரவுண்டு கட்டி அடித்த பெண்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில், பாத்ரூமில் கேமரா பொருத்தி, வீடியோ எடுத்த வாலிபரை, பெண்கள் ரவுண்டு கட்டி அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

எவ்வளவு தான் சொந்த வீடு பாதுகாப்பு என்றாலும் சில விஷமிகளின் தவறான முயற்சி சொந்த வீட்டையும் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தி விடும்.

அதில் தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு ரகசிய கேமராக்களை வைத்து ரசிக்கும் சம்பவங்களும் அங்காங்கே நடைபெற தொடங்கி உள்ளது. அப்படி ஒருசம்பவம் தான் கோவை ராமநாதபுரம் பகுதியில் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

செய்த காரியம்

செய்த காரியம்

கோவை, அம்மன் குளம் , புது அவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் வீட்டருகே வசிப்பவர் முருகன். இவருக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார். முருகன் செய்த வேலையால் அந்த பகுதி மக்கள் அவரை அடித்து வெளுத்துள்ளனர்.

ராஜ்குமார் வீடு

ராஜ்குமார் வீடு

இந்நிலையில் ராஜ்குமார் வீட்டின் பாத்ரூமில், ரகசிய கேமிராவை முருகன் வைத்து இருந்தார். இதை ராஜ்குமார் மனைவி பார்த்து அதிர்ச்சியடைந்தார், உடனடியாக, ராஜ்குமாரிடம் தெரிவித்தார்.

சிக்கிய முருகன்

சிக்கிய முருகன்

யார் இந்த செயலை செய்தார்கள் என்று விசாரித்த பின்னர் முருகன் செய்த வேலை என கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ், அஜித், சஞ்சய் மற்றும் பெண்கள் ஒன்று சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர்.

முருகன் கைது

முருகன் கைது

ராஜ்குமார் மனைவி கொடுத்த புகாரின் பேரில், கோவை ராமநாதபுரம் போலீசார் , முருகனை கைது செய்து, கேமிராவை பறிமுதல் செய்தனர், மேலும், முருகனை தாக்கியதாக, சுரேஷ், சஞ்சய், அஜீத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+