ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த இளம் பெண்.. போக்சோவில் கைது
கோவை: வளர் இளம் பருவ காதலும், அதனை தொடர்ந்து நடந்த கல்யாணமும், இளம் பெண்ணுக்கு சிறை தண்டனையை கொடுத்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டின்ஏஜ் காதல்கள் திருமணத்தில் முடிந்தால் சிக்கலில் தான் முடிகிறது. அவசரப்பட்டு ஆசைக்காதலன், காதலியோடு ஓடிபோய் திருமணம் செய்து கொண்டு சிக்கலை சந்திப்பவர்கள் ஏராளம்.குடி பழக்கம், விட்டுக்கொடுத்துபோகாத குணம், பொருளாதார ஸ்திரமின்மை, முடிவெடுப்பதில் பக்குவமின்மை போன்ற பிரச்சனைகளால் வாழ்க்கையே அழிந்து போனவர்கள் ஏராளம்,
டீன்ஏஜ் காதலர்கள் வயதை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டு கடைசியில் போக்சோ குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவிக்கும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. அப்படி சம்பவம் ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு பொள்ளாச்சியில் நடந்துள்ளது.

பொள்ளாச்சி
எந்த கிராமம், எந்த தெரு, யார் என்ற விவரம் எல்லாம் தெரிவிக்க கூடாது என்பதால் கற்பனையான பெயர்கள் வைத்துள்ளோம். என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம். பொள்ளாச்சி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்கில் 19 வயது இளம்பெண் லாவண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை செய்து வருகிறார். அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவன் கணேசனுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையம்
அடிக்கடி பெட்ரோல் போட வரும்போது சிரிக்க வைக்கும் வகையில் சிறுவன் கணேசன் பேசியதை கண்டு மயங்கி லாவண்யா நட்புடன் பழக தொடங்கி உள்ளார். நாளைடைவில் காதலாக மாறி இருக்கிறது. இந்த காதல் விவகாரம் சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்ததால் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணம்
இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு சிறுவன் கணேசனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது கணேசனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற லாவண்யா, கணேசனிடம் நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

பெற்றோரிடம் தகவல்
அதன்பின்னர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய கல்யாணம் செய்திருக்கிறார். இதனிடையே திருமணம் முடிந்த பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவன் கணேசனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது, லாவண்யாவும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார்.

பெண் குறித்து தகவல்
அதிர்ச்சி அடைந்த கணேசனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி லாவண்யா (19) திருமணம் செய்தது தெரியவந்தது.

சிறையில் இளம் பெண்
இதனையடுத்து லாவண்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள். வளர் இளம் பருவ காதலால் 19 வயதுசிறுமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 17 வயது சிறுவனை திருமணம் செய்த காரணத்திற்காக போக்சோவில் இளம் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications