Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AI மூலம் 24 மாணவிகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்.. கோவை கல்லூரி மாணவர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் காதலிகளின் உதவியுடன் ஏஐ செயலிகள் மூலம் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பணம் கேட்டு மிரட்டிய மாணவரை மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களின் மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆம் ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் அதே கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகளை காதலித்து வருகின்றனர். இதையடுத்து, 4 பேரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டு வந்துள்ளது.

coimbatore-youth-arrested-for-morphing-students-photo-in-ai

ஆபாசமாக சித்தரிப்பு..

இதையடுத்து, 2 மாணவர்களும் என்ன செய்வதென்று யோசித்து வந்துள்ளனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த வசதியான மாணவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து, அவர்களுக்கே அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்துள்ளனர். தங்களின் யோசனை குறித்து மாணவிகளிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவிகளும் தங்களின் காதலர்களின் யோசனையை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தங்கள் கல்லூரியில் படித்து வரும் வசதியான 2 மாணவிகளிடம் அந்த மாணவிகள் பழகி நண்பர்களாகி உள்ளனர். பின்னர், அவர்களின் செல்போனை வாங்கிக் கொண்டு புகைப்படத்தையும் வாங்கியுள்ளனர். அந்த மாணவிகளின் செல்போன் எண்ணை தங்களது காதலர்களுக்குப் பகிர்ந்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் பதிவேற்றம்

இதையடுத்து, அந்த மாணவர்கள் 2 மாணவிகளின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அந்த மாணவிகளின் செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மிரட்டியுள்ளனர். புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகளும் முதலில் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டி வந்ததையடுத்து போலீஸில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பெண் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைமையில் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அந்த 2 மாணவர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போதுதான் தங்களது காதலிகளின் உதவியுடன், மாணவிகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து, பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை

இதில், திருச்சியைச் சேர்ந்த மாணவர் ஆபாசமாக மாணவிகளின் புகைப்படங்களை மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சமூக வலைதள நிறுவனத்திலிருந்து கிடைத்த விவரங்களும் சந்தேக நபருடன் பொருந்தியது. திருச்சியைச் சேர்ந்த அந்த மாணவர், பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களை அவர்களின் சமூக வலைதள கணக்குகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரித்தது இருப்பதும், தனது பெண் நண்பரால் பகிரப்பட்ட சில புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பிரிவு 67A (அவதூறான/அருவருப்பான உள்ளடக்கங்களை மின்னணு வடிவில் வெளியிடுதல்) மற்றும் BNS பிரிவு 75(1)(iii) (பாலியல் தொல்லை) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவரை கைது செய்தனர். மேலும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கையும் அதிகாரிகள் நீக்கினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+