கோவை மக்களுக்கு குட்நியூஸ்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. வீடு தேடி வரும் அரசு சேவைகள்
கோவை: "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் வரும் 15ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் தொடங்கவுள்ளதாகவும், இதில் 336 முகாம்கள் 4 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்தார். இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஜூலை 15-ஆம் தேதி முதல் நவம்பா் மாதம் வரை மாநிலம் முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் கோவை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வரும் ஜூலை 15 -ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் ஒரே இடத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் வரும் 15ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் தொடங்கவுள்ளதாகவும், இதில் 336 முகாம்கள் 4 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்தார். இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பவன்குமார் செய்தியாளரகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஊரகப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் இருக்கும் இடங்களிலேயே அவர்களுக்கு சேவைகள் கிடைக்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் 15 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் துவங்க இருக்கிறது.
மாவட்டத்தில் 336 முகாம்கள் 4 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1,694 வாலண்டியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று துண்டு அறிக்கையை பொதுமக்களிடம் கொடுப்பார்கள். அதில் இந்த முகாம்களில் என்னென்ன வசதிகள், வாய்ப்புகள் இருக்கின்றது என்பது குறித்து தெரிவிக்கப்படும்.
நகரப் பகுதிகளுக்குத் தனியாகவும், ஊரகப் பகுதிகளுக்கு தனியாகவும் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த முகாம்களிலேயே மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படவுள்ளது. இதில், மருத்துவ முகாம்களும், காவல்துறை சார்பில் தேவையான உதவிகள் எதுவும் இருந்தால் அதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், அவர்கள் முகாம் நடைபெறும் நாளன்று அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்."உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில், தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றார்.












Click it and Unblock the Notifications