பிபின் ராவத் மரணத்தை மாணவர்கள் கொண்டாடியதாக பரவிய வதந்தி! கோவை ஹாஸ்டல் வீடியோவில் இருப்பது என்ன?
கோவை: ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த விவகாரத்தை கொண்டாடியதாக தகவல் பரப்பப்பட்ட சம்பவத்தில், கேரள போலீஸாருடன் இணைந்து கோவை மாநகர காவல் துறையினரும் அதிரடியாக விசாரணையை துவக்கி உள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத், ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அது தொடர்பாக பலரும் பலவித கருத்துக்களை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்..
அப்படித்தான், கோவையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. கோவை நேரு கல்வி குழுமத்தில், புதிதாக சேரும் மாணவர்களை கொண்டாடும் விதத்தில் ஒரு வீடியோ எடுக்கப்பட்டது..
பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் சிபிஎஸ்இ வினாத்தாள்.. முட்டாள்தானமானது.. கொதிக்கும் பெண் பிரமுகர்கள்
தமிழ்நாட்டு மாணவர்களை அவமதிக்கும் விதத்தில் சங்கி ஐடி விங் உருவாக்கி பரப்பியிருக்கும் அவதூறு வீடியோ அம்பலப்படுள்ளது.
— சிந்தன் - Sindhan (@sindhan) December 12, 2021
சங்க பரிவாரத்தின் தேச விரோதம், முப்படை தளபதி மரணத்தையும் விட்டு வைக்கவில்லை.
ச்சீ...! pic.twitter.com/JzPXSOZOFX

பிபின் ராவத்
ஆனால், அதை பிபின் ராவத் மரணத்தைக் கொண்டாடும் வீடியோவாக விஷமிகள் பரப்பி விட்டனர்.. அதுமட்டுமல்ல, இந்த வீடியோ உண்மை என்று நம்பி, இதை ஒரு ஒரு மலையாள சேனலும் செய்தியாக வெளியிட்டு விட்டது.. இது சம்பந்தப்பட்ட கல்வி குழுமத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. உண்மை தன்மை என்னவென்றுகூட தெரிந்து கொள்ளாமல், ஊடகம் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுள்ளதே என்று கண்டித்துள்ளது.. அது தொடர்பாக ஒரு விளக்கத்தையும் கல்வி குழுமம் தந்துள்ளது.

அவதூறு
அதில், "மாணவர்களின் நாட்டுப்பற்றையும், ராணுவ வீரர்களின் மரணத்தையும் தொடர்புபடுத்தி, தவறாக சித்தரித்து அதை பிரச்சாரமாகவே சில விஷமிகள் செய்து வருகின்றனர்.. இதில், கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது... நேரு கல்லூரியின் நிறுவனர் ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவார். மேலும் கல்லூரியில் பேராசிரியர்கள், அதிகாரிகள் 50 சதவீதத்துக்கும் மேல் மேல் இந்திய ராணுவம், விமானப்படை அல்லது கடற்படையில் பணிபுரிந்தவர்கள்.

அஞ்சலி
கல்லூரியில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் மறைவிற்கு இரங்கல் கூட்டமும் மவுன அஞ்சலியும் செலுத்தினோம்.. ஆனால் இப்படி தவறான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டப்படி, காவல்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தது.. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

உத்தரவு
இதையடுத்து, அந்த வீடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து விசாரணை நடத்த மாநகர காவல் துறையில் மத ரீதியிலான விவகாரங்களை கையாளும், சிறப்பு பிரிவினருக்கு கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.. போலீசாரும் உடனடியாக விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான் சம்பந்தப்பட்ட அந்த வீடியோவையும் ஆராய்ந்தனர்.. உண்மையிலேயே, அந்த காலேஜின் ஹாஸ்டலுக்கு புதிதாக வந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக, 3 சீனியர் மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது..

நடவடிக்கை
அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை, பிபின் ராவத் உயிரிழப்புக்கு முன்னமேயே எடுக்கப்பட்டிருந்ததும் உறுதியானது. பின்னர், ஒரு வீடியோவை வைத்து, தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீசாரும் தயாராகி உள்ளனர்.. முக்கியமாக இந்த வீடியோவை வெளியிட்ட மலையாள சேனல் நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரகிறது.. இதற்காக அந்த மாநில போலீஸாருடன் நம் போலீசார் இணைந்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணை
இறுதியில் சம்பந்தப்பட்ட சேனல் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்... அதுகுறித்த தகவல்களை கேட்டு பெற்று, விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக நம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சோஷியல் மீடியாவில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே எச்சரிந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.