“சில்லறை”.. அண்ணாமலை பற்றிய நிருபர் கேள்வி.. சீறிய அமைச்சர் டிஆர்பி ராஜா!
கோவை: "திமுக அதிமுக இடையேதான் போட்டி. சில்லறை கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாது" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இன்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக நிற்கிறார். திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக களமிறங்குகின்றனர்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்துக்கான முழுப் பொறுப்பையும் திமுக தலைமை அவரிடமே கொடுத்திருந்தது. இப்போது அவர் சிறையில் இருப்பதால் அந்த பொறுப்பு தொழில் துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான டிஆர்பி ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோவை மக்களவை தொகுதி அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் எஸ்பி வேலுமணியின் ஏரியா. மேலும் பாஜகவும் கணிசமான செல்வாக்கை கொண்டிருக்கும் பகுதி. போதாக்குறைக்கு பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனால் தேர்தல் களம் மிக சூடாக இருக்கும் என்பதால், அமைச்சர் டிஆர்பி ராஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். கோவையில் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையிலேயே முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணியின் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை அமைச்சர் டிஆர்பி ராஜா நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து திமுக சின்னத்தில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா, "திமுக கோவையில் அட்டகாசமான வெற்றியை பெறும். திமுகவுக்கு எதிராக போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் கோவையில் பெறும். பொதுமக்கள் திமுகவின் பக்கம் தான் உள்ளனர். பாஜகவின் தேசிய தலைவரே இங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
கோவையில் திராவிடக் கட்சிகளால் 2 டிகிரி வெப்பம் அதிகமாகியுள்ளது என்ற அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிஆர்பி ராஜா, "இன்னும் அடுப்பு பத்த வைக்கவில்லை" என்றார். திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சித்து உள்ளாரே என்ற கேள்விக்கு, "எதிரில் அதிமுக என்ற இயக்கம் உள்ளது. பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள். சில்லறை கட்சிகள் குறித்து கேட்டால் பதில் சொல்ல முடியாது" என்றார்.
உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்து அரசியல் பண்ணுகிறார், அந்த ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, "ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். திமுகவை திசை திருப்புவதற்காகவே இது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் களத்தில் திமுக அதிமுக மட்டுமே உள்ளது.
எங்கள் எதிரி அதிமுக தான். அதை குறி வைத்து அடிப்போம். அதற்காக பொதுமக்களை சந்தித்து சென்று கொண்டிருக்கும் எங்களிடம் மற்றவர்கள் பற்றி கேள்வி கேட்டால் அது எங்களுக்கு கவனச் சிதறல் மட்டுமே. எனவே பாஜக போன்ற சில்லறை கட்சிகளை ஓரங்கட்டி விட்டு களத்தில் இருக்கும் உண்மையான எதிரியை வீழ்த்த வியூகம் வகுத்து கோவையில் மகத்தான வெற்றி பெறுவோம்" என்றார்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு












Click it and Unblock the Notifications